சினிமா செய்திகள்

பல வண்ண முக கவசத்தில் குஷ்பு - வைரலாகும் புகைப்படங்கள் + "||" + Khushboo in multi-colored face mask - viral photos

பல வண்ண முக கவசத்தில் குஷ்பு - வைரலாகும் புகைப்படங்கள்

பல வண்ண முக கவசத்தில் குஷ்பு - வைரலாகும் புகைப்படங்கள்
குஷ்பு தனது உடைகளுக்கு பொருத்தமாக பல வண்ணங்களில் முக கவசம் அணிந்துள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகின்றன.
கொரோனா பரவலை தடுக்க முக கவசம் அணிவதன் அவசியத்தை நடிகர், நடிகைகள் தொடர்ந்து வற்புறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நாடு முழுவதும் புதிதாக முக கவசம் கடைகள் முளைத்துள்ளன. சாலையோரங்களிலும் முக கவசங்களை குவித்து விற்கிறார்கள்.


நடிகை குஷ்புவும் முக கவசம் அணியும்படி தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில், ‘’வாழ்க்கையின் கடினமான சூழலில் இருக்கிறோம். இந்த கிருமி தொற்று புதியது. இயல்பாக இருக்க நாம் வெளியே சென்று பணிபுரிய வேண்டி உள்ளது. பழைய வாழ்க்கைக்கும் செல்ல வேண்டி இருக்கிறது. எனவே நாம் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருக்க செய்ய வேண்டிய முதல் காரியம் முக கவசம் அணிவது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே செல்லுங்கள். அப்படி செல்லும்போது முக கவசம் அணியுங்கள். உங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். முக கவசம் அணிய மறக்காதீர்கள்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் குஷ்பு தனது உடைகளுக்கு பொருத்தமாக கலர் கலராக பல வண்ணங்களில் முக கவசம் அணிந்துள்ள புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்று கொண்டுள்ளோம் - குஷ்பு
பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்று கொண்டுள்ளோம் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.