சினிமா செய்திகள்

மும்பையை ’மினி பாகிஸ்தான்’ என விமர்சித்த நடிகை கங்கனா ரணாவத்திற்கு ’ஒய்’ பிரிவு பாதுகாப்பு + "||" + Home Ministry grants ‘Y+ category’ security to Kangana Ranaut ahead of Mumbai visit

மும்பையை ’மினி பாகிஸ்தான்’ என விமர்சித்த நடிகை கங்கனா ரணாவத்திற்கு ’ஒய்’ பிரிவு பாதுகாப்பு

மும்பையை ’மினி பாகிஸ்தான்’ என விமர்சித்த நடிகை கங்கனா ரணாவத்திற்கு ’ஒய்’ பிரிவு பாதுகாப்பு
நடிகை கங்கனா ரணாவத்தின் மும்பை பயணத்தின் போது அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
மும்பை,

சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு இந்தியில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கம், போதை பொருள் புழக்கம் உள்ளது என்றெல்லாம் நடிகை கங்கனா ரணாவத் குற்றம் சாட்டி வருகிறார். வாரிசு நடிகர்களுக்கு ஆதரவாக இருப்பதாக மராட்டிய அரசியல்வாதிகள் மற்றும் மும்பை போலீசாரையும் சாடினார். இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின.

சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறும்போது, கங்கனா மராட்டியத்தையும் மும்பை போலீசையும் அவமானப்படுத்தி உள்ளார். பயம் இருந்தால் மும்பைக்கு திரும்ப வேண்டாம் என்று கூறியிருந்தார். மராட்டிய மந்திரி அனில் தேஷ்முக் கூறும்போது, மும்பை போலீசார் ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு இணையானவர்கள். மும்பை போலீசை குற்றம் சாட்டும் கங்கனா ரணாவத்துக்கு மும்பையிலோ அல்லது மராட்டிய மாநிலத்திலோ வாழ உரிமை இல்லை என்றார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் கங்கனா ரணாவத் டுவிட்டரில், ‘‘நான் மும்பை வரவேண்டாம் என்று பலரும் என்னை அச்சுறுத்துகிறார்கள். வருகிற 9-ந்தேதி மும்பை வருகிறேன். முடிந்தால் என்னை தடுத்து பாருங்கள்” என்று சவால் விடுத்துள்ளார். கங்கனா தற்போது சொந்த ஊரான மணாலியில் தங்கி உள்ளார்.

வரும் 9 ஆம் தேதி மும்பைக்கு வரும் கங்கனா ரணாவத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் மத்திய உள்துறை அமைச்சகம் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க அனுமதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றும் சி.ஆர்.பி.எப். டி.ஐ.ஜி.க்கு கொரோனா பாதிப்பு
உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றும் சி.ஆர்.பி.எப். டி.ஐ.ஜி.க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. துணை ராணுவத்தினருக்கான கேன்டீன்களில் இந்திய தயாரிப்பு பொருட்கள் மட்டுமே விற்பனை செய்ய முடிவு
துணை ராணுவத்தினருக்கான கேண்டீன்களில் இந்திய தயாரிப்பு பொருட்கள் மட்டுமே விற்பனை செய்ய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
3. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் 27.52% உள்ளது: மத்திய சுகாதாரத்துறை
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் 27.52 சதவிகிதமாக உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
4. ஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்கள் வரும் நாட்களில் வெளியிடப்படும்- உள்துறை அமைச்சகம்
ஊரடங்கு தளர்வு குறித்த புதிய வழிகாட்டுதல்கள் வரும் நாட்களில் வெளியிடப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
5. வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல உள்துறை அமைச்சகம் அனுமதி
தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலாப்பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.