சினிமா செய்திகள்

பிரபல நடிகர் ஜெய பிரகாஷ் ரெட்டி மாரடைப்பால் காலமானார் + "||" + Actor Jaya Prakash Reddy passes away

பிரபல நடிகர் ஜெய பிரகாஷ் ரெட்டி மாரடைப்பால் காலமானார்

பிரபல நடிகர் ஜெய பிரகாஷ் ரெட்டி மாரடைப்பால் காலமானார்
தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் பிரபல குணச்சித்திர நடிகர் ஜெய பிரகாஷ் ரெட்டி காலமானார்.

பிரபல வில்லன் நடிகர் ஜெயப்பிரகாஷ் ரெட்டி. இவர் கொரோனா ஊரடங்கில் ஐதராபாத்தில் இருந்து சொந்த ஊரான ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உ ள்ள சிர்வேலுக்கு சென்று வசித்தார். நேற்று அதிகாலை அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74. ஜெயப்பிரகாஷ் ரெட்டி பல படங்களில் நகைச்சுவை வில்லனாக நடித்துள்ளார்.

தமிழில் அஜித்குமாரின் ஆஞ்சநேயா படம் மூலம் வில்லனாக அறிமுகமானார். தனுஷ், ஜெனிலியா ஜோடியாக நடித்த உத்தம புத்திரன் படத்தில் ஜெயப்பிரகாஷ் ரெட்டியின் நகைச்சுவை வில்லன் கதாபாத்திரம் பேசப்பட்டது.

சூர்யாவின் ஆறு, விஜயகாந்தின் தர்மபுரி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கில் வெங்கடேஷ் கதாநாயகனாக நடித்த பிரம்மபுத்ருடு படத்தில் அறிமுகமாகி ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். கடைசியாக மகேஷ்பாபுவுடன் சர்லேரு நீக்கெவ்வரு படத்தில் நடித்து இருந்தார்.

ஜெயப்பிரகாஷ் ரெட்டியின் திடீர் மறைவு தமிழ், தெலுங்கு பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மறைவுக்கு ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. வேல் யாத்திரை நடத்த அனுமதி கேட்கும் பாஜக, தமிழைத் தேசிய மொழியாக்க கோரிக்கை வைக்குமா? - கனிமொழி எம்.பி கேள்வி
வேல் யாத்திரை நடத்த அனுமதி கேட்கும் பாஜக, தமிழைத் தேசிய மொழியாக்க கோரிக்கை வைக்குமா? என்று கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பி உள்ளார்.