சினிமா செய்திகள்

திகில் கதையில் பிரியாமணி + "||" + Priyamani in horror story

திகில் கதையில் பிரியாமணி

திகில் கதையில் பிரியாமணி
திகில் கதையில் நடிகை பிரியாமணி நடிக்க உள்ளார்.

தமிழில் பருத்தி வீரன் படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற பிரியாமணி முன்னணி நடிகையாக வலம் வந்தார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்தார். 2017-ல் திருமணம் செய்து கொண்டு சிறிது காலம் ஒதுங்கிய அவர் மீண்டும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது புதிய திகில் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்துக்கு ‘கொட்டேஷன் கேங்க்’ என்று பெயர் வைத்துள்ளனர்.

தாதாக்கள், ரவுடிகளை பற்றிய படமாக தயாராகிறது. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கின்றனர். இந்த படத்தை பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விவேக் இயக்குகிறார்.

இதில் தன்யா, ரபியா, விஷ்ணு வாரியர், அக்‌ஷயா, உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சில இந்தி நடிகர்களும் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் 7-ந்தேதி தொடங்குகிறது. ஒரு தொழில்முறை கொலைகாரனை பற்றிய திகில் படமாக தயாராகிறது என்று இயக்குனர் விவேக் தெரிவித்தார். காயத்ரி சுரேஷ் தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் தயாராகிறது.