சினிமா செய்திகள்

பசுமை இந்தியா திட்டத்தில் 1,650 ஏக்கர் வனப்பகுதியை தத்தெடுத்த பிரபாஸ் + "||" + Prabhas adopts 1,650 acres of forest under the Green India project

பசுமை இந்தியா திட்டத்தில் 1,650 ஏக்கர் வனப்பகுதியை தத்தெடுத்த பிரபாஸ்

பசுமை இந்தியா திட்டத்தில் 1,650 ஏக்கர் வனப்பகுதியை தத்தெடுத்த பிரபாஸ்
நடிகர் பிரபாஸ், பசுமை இந்தியா திட்டத்தில் 1,650 ஏக்கர் வனப்பகுதியை தத்தெடுத்துள்ளார்.

தமிழ், தெலுங்கில் வெளியான பாகுபலி படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் பிரபாஸ். அவரது சாஹோ படமும் இரு மொழிகளிலும் வெளியானது. ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகும் ஆதிபுருஷ் படத்தில் ராமராக நடிக்க உள்ளார்.

கொரோனா ஊரடங்கில் பிரபாஸ் ரூ.4 கோடி நிதி அளித்தார். தற்போது ஆந்திர மாநிலம் டண்டிகா அருகில் உள்ள 1,650 ஏக்கர் வனப்பகுதியை பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் தத்தெடுத்து மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.2 கோடி வழங்கி உள்ளார்.

பிரபாஸ் தத்தெடுத்துள்ள இந்த வனப்பகுதி ஐதராபாத்துக்கு 20 கிலோ மீட்டர் தூரத்தில் அவுட்டர் ரிங் சாலையில் அமைந்துள்ளது. இதற்கான அடிக்கல்லை தெலுங்கானா மாநில அமைச்சர் இந்திராகரன் ரெட்டி அல்லோலாவுடன் பிரபாஸ் நட்டார். பின்னர் வனப்பகுதியில் மரக்கன்றுகளையும் நட்டார்.

வனப்பகுதியின் சிறிய பகுதி வனப்பூங்காவாக மாற்றப்படும் என்றும் மற்ற பகுதியில் அரியவகை மூலிகைகள் தாவரங்களுடன் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கும் என்றும் வன அலுவலர்கள் தெரிவித்தனர். பூங்காவில் வாசல் அமைப்பது, வெளியில் இருந்தே பூங்காவில் இருப்பவற்றை பார்ப்பது, நடைபாதை அமைத்தல், மூலிகை பண்ணை அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு- இன்று மேலும் 1,242 பேருக்கு தொற்று
கேரளாவில் இன்று ஒரே நாளில் 1,242 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு- இன்று மேலும் 1,908 பேருக்கு தொற்று
கேரளாவில் இன்று ஒரே நாளில் 1,908 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 1,092 பேர் மரணம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 52,889 ஆக அதிகரிப்பு
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 1,092 பேர் மரணமடைந்தனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52,889 ஆக அதிகரித்துள்ளது.
4. டெல்லியில் இன்று ஒரேநாளில் 1,113 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று ஒரேநாளில் 1,113 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்ய்ப்பட்டுள்ளது.
5. கனமழைக்கு 74 வீடுகள் சேதம்: முகாம்களில் 1,000 பேர் தங்க வைப்பு
நீலகிரியில் கனமழைக்கு 74 வீடுகள் சேதம் அடைந்தன. நிவாரண முகாம்களில் 1,000 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.