சினிமா செய்திகள்

ஓ.டி.டி.யில் விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்கள் + "||" + Vijay Sethupathi and Sivakarthikeyan films in OTT

ஓ.டி.டி.யில் விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்கள்

ஓ.டி.டி.யில் விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்கள்
ஓ.டி.டி.யில் விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோரது படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா ஊரடங்கில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேசின் பெண்குயின், வரலட்சுமி சரத்குமாரின் டேனி, வைபவ் நடித்த லாக்கப் உள்ளிட்ட படங்கள் தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி இணைய தளமான ஓ.டி.டி.யில் வெளிவந்தன. சூர்யா நடித்துள்ள சூரரை போற்று படம் அடுத்த மாதம் 30-ந்தேதி ஓ.டி.டி.யில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். இந்த நிலையில் மேலும் சில படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளன. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக நடித்துள்ள ரணசிங்கம் படம் ஓ.டி.டி.யில் வருவது உறுதியாகி உள்ளது. அடுத்த மாதம் 2-ந்தேதி இந்த படம் வெளியாகும் என்று தெரிகிறது.

இதுபோல் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தையும் ஓ.டி.டி.யில் வெளியிட முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மாதவன், அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் படப்பிடிப்பு முடிந்து பல மாதங்களாக திரைக்கு வராமல் முடங்கி உள்ளது. நிசப்தம் படத்தையும் அடுத்த மாதம் ஓ.டி.டி.யில் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன. விஷால் நடித்துள்ள சக்ரா, தனுஷ் நடித்துள்ள ஜெகமே தந்திரம், கீர்த்தி சுரேசின் குட்லக் சகி, சந்தானத்தின் டிக்கிலோனா ஆகிய படங்களும் ஓ.டி.டி.யில் வெளியாகும் என்று தெரிகிறது.