சினிமா செய்திகள்

தொழில் அதிபரான சமந்தா + "||" + Business President Samantha

தொழில் அதிபரான சமந்தா

தொழில் அதிபரான சமந்தா
முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா தொழில் அதிபராக மாறி உள்ளார்.

தமிழ், தெலுக்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா தொழில் அதிபராக மாறி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“எனக்கு ஸ்டைலான ஆடைகளை உடுத்த பிடிக்கும். ரசிகர்கள் ஸ்டைல் நடிகை என்றால் சமந்தாவை சொல்லலாம் என்கிறார்கள். உடை விஷயத்தில் ஆரம்பத்தில் இருந்து பிரத்யேக முக்கியத்துவம் கொடுக்க காரணம் பேஷன் மீது எனக்கு இருக்கும் இஷ்டம். அந்த விருப்பத்தை சினிமாவோடு விட்டு விடாமல் பெண்களுக்கான உடை வடிவமைப்பாளராக மாறி பேஷன் டிசைன் நிறுவனம் ஒன்று தொடங்கி இருக்கிறேன். இது எனது கனவு. சில மாதங்கள் முயற்சி செய்து இப்போதுதான் நிறைவேற்றி உள்ளேன். பேஷன் துறையில் எனக்கு இருக்கும் காதல், மோகத்துக்கு உதாரணமாக இந்த தொழில் இருக்கும். நடிகையாக எனது பயணத்தை ஆரம்பிக்கும் முன்பே பேஷன் துறையில் ஆர்வம் இருந்தது. தொழில் தொடங்கி இருக்கும் சந்தோஷத்தை எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.”

இவ்வாறு சமந்தா கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தொழில் அதிபர் கொலை வழக்கில் சிறுவன், கார் டிரைவர் கைது பரபரப்பு வாக்குமூலம்
கோவை தொழில் அதிபரை கொலை செய்த கால் டாக்சி டிரைவர் மற்றும் ஒரு சிறுவனை போலீசார் கைது செய்தனர். அவர்கள் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.
2. “நயன்தாராவுக்கு ரூ.6 கோடி கொடுக்கும்போது எனக்கு 3 கோடி கொடுக்கக் கூடாதா?” - தயாரிப்பாளரிடம் சமந்தா கேள்வி
“நயன்தாராவுக்கு ரூ.6 கோடி சம்பளம் கொடுக்கும்போது எனக்கு 3 கோடி கொடுக்கக் கூடாதா?” என்று தயாரிப்பாளரிடம் நடிகை சமந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.