சினிமா செய்திகள்

பா.ஜனதாவில் சிவகார்த்திகேயன்? + "||" + Sivakarthikeyan in BJP?

பா.ஜனதாவில் சிவகார்த்திகேயன்?

பா.ஜனதாவில் சிவகார்த்திகேயன்?
பா.ஜனதாவில் நடிகர் சிவகார்த்திகேயன் இணைய உள்ளாரா என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் பிரசாரத்துக்கு நடிகர், நடிகைகளை இழுக்க அரசியல் கட்சிகள் வரிந்து கட்டி இறங்கி உள்ளன. ரகசிய தூதுகளும் அனுப்புகின்றன. ஏற்கனவே சில கட்சிகள் நடிகர், நடிகைகளை தங்கள் கட்சியில் இணைத்து பிரசார பயிற்சிகள் அளிக்க தொடங்கி உள்ளன. கட்சி தலைவர்களின் சுற்றுப்பயணத்தில் கூட்டங்களை சேர்க்கவும் இவர்களை பயன்படுத்த உள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனை பா.ஜனதா கட்சிக்கு இழுக்க முயற்சிகள் நடப்பதாகவும் அவரும் அதில் சேருவதற்கு சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் இணைய தளங்களில் தகவல் பரவியது. சட்டமன்ற தேர்தலில் சிவகார்த்திகேயனை பிரசாரத்துக்கு பயன்படுத்த அந்த கட்சி திட்டமிட்டு உள்ளது என்றும் கூறப்பட்டது. இது குறித்து நடிகையும் பா.ஜனதா பிரமுகருமான காயத்ரி ரகுராம் கூறும்போது, “நடிகர் சிவகார்த்திகேயன் விரும்பினால் பா.ஜனதா கட்சியில் இணையலாம்” என்றார். இது பட உலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் சிவகார்த்திகேயன் தரப்பில் பா.ஜனதாவில் சேரப்போவதாக வெளியான தகவல் வதந்திதான், எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை” என்று மறுக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. தொல்.திருமாவளவன் எம்.பி.யை கைது செய்ய கோரி பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
தொல்.திருமாவளவன் எம்.பி.யை கைது செய்ய கோரியும் பா.ஜனதா மாவட்ட அரசு தொடர்பு பிரிவு சார்பில் சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
2. பா.ஜனதா.அரசின் நிர்வாகத் திறமையின்மையால் நாடும், ஜனநாயகமும் ஆபத்தான நிலையில் உள்ளன- சோனியாகாந்தி
பா.ஜனதா அரசின் நிர்வாகத் திறமையின்மையால் நாடும், ஜனநாயகமும் ஆபத்தான கட்டத்தில் உள்ளன என சோனியாகாந்தி தாக்கி உள்ளார்.
3. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்து மாநிலம் முழுவதும் பா.ஜனதா போராட்டம்
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்து பா.ஜனதா மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தியது.
4. வெறுக்கத்தக்க பேச்சு வெளியிட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ பேஸ்புக் பக்கத்திற்கு தடை
வெறுக்கத்தக்க பேச்சு வெளியிட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ பேஸ்புக் பக்கம் தடை செய்யப்பட்டு உள்ளது.
5. நாடாளுமன்ற விசாரணை வேண்டும்: பா.ஜனதா கட்டுப்பாட்டில் ‘வாட்ஸ் அப்’? - காங்கிரஸ் புதிய குற்றச்சாட்டு
பா.ஜனதா கட்டுப்பாட்டில் வாட்ஸ் அப் விவகாரத்தில் நாடாளுமன்ற விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறித்தி உள்ளது.