சினிமா செய்திகள்

கங்கானா ரனாவத்துக்கு பதில் அளித்த பாகிஸ்தான் பத்திரிகையாளருக்கு டுவிட்டரில் கடும் கண்டனம் + "||" + Pakistani journalist Mehr Tarar gets brutally trolled for her post on Kangana Ranaut

கங்கானா ரனாவத்துக்கு பதில் அளித்த பாகிஸ்தான் பத்திரிகையாளருக்கு டுவிட்டரில் கடும் கண்டனம்

கங்கானா ரனாவத்துக்கு பதில் அளித்த பாகிஸ்தான் பத்திரிகையாளருக்கு  டுவிட்டரில் கடும் கண்டனம்
கங்கானா ரனாவத்துக்கு பதில் அளித்த பாகிஸ்தான் பத்திரிகையாளர் மெஹ்ர் தாரார் மீது டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மும்பை

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் மும்பை நகரம் உள்ளது என்று நடிகை கங்கனா விமர்சித்ததால் ஆளும் சிவசேனா அரசு கடும் கோபம் அடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக கங்கானாவின் வீட்டு வளாகத்தில் சட்டவிரோத கட்டுமானங்கள் உள்ளதாக கூறி அதனை நேற்று மும்பை மாநகராட்சி ஊழியர்கள் இடிக்கத் தொடங்கினர். ஆனால் மும்பை ஐகோர்ட்டின் தலையீட்டால் இடிப்புப் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. 

இந்த நிலையில் தனது வீடு இடிக்கப்பட்டது போல் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயின் ஆணவமும் இடிக்கப்படும் என்று நடிகை கங்கனா தெரிவித்துள்ளார். இன்று அனுகூலமாக உள்ள காலம் எப்போதும் அப்படியே இராது என்றும்  குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டு இருந்தார்.

சிவசேனா மீதான கடுமையான தாக்குதலில், பால் தாக்கரே கட்சியைக் கட்டியெழுப்பிய சித்தாந்தம் அதிகாரத்திற்காக விற்கப்பட்டதாக கங்கானா ரனாவத் தனது தாக்குதலை தீவிரப்படுத்தினார்.

பி.எம்.சி எடுத்த நடவடிக்கையை ஜனநாயகம் இல்லாத பாகின ஸ்தான் எஒப்பிட்டு கங்கனா ரனாவத் எழுதிய இடுகைக்கு பதிலளித்த பாகிஸ்தான் பத்திரிகையாளர் மெஹ்ர் தாரார், பாலிவுட் நடிகை மீது தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

அவர் தனது டுவிட்டரில்  "அன்புள்ள கங்கனா, தயவுசெய்து எங்கள் நாட்டின் பெயரை ஈடுபடுத்தாமல் உங்கள் அரசியல் / பிற போர்களை எதிர்த்துப் போராடுங்கள். பாகிஸ்தானில், தேசிய வீராங்கனைகளின் வீடுகள் அல்லது அலுவலகங்கள் இடிக்கப்படவில்லை என கூறி இருந்தார்.

இதன் பின்னர், பல டுவிட்டர் பயனர்கள் பாகிஸ்தான் குறித்து கேள்விகளை எழுப்பத் தொடங்கி மெஹ்ர் தாரரை ட்ரோல் செய்யத் தொடங்கினர்.

ஒரு பயனர், "நீங்கள் சொல்வது சரி, பாகிஸ்தானில் வீடுகள் இல்லை, அலுவலகங்கள் இடிக்கப்படவில்லை. சிறுபான்மையினரின் மத தளங்களை இடிக்க மக்கள் மட்டுமே கூடியிருக்கிறார்கள் என கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கங்கனா ரனாவத்தின் பதிவுகள் நீக்கம்: விதிகளை மீறியதாக டுவிட்டர் நிறுவனம் விளக்கம்
கங்கனா ரனாவத்தின் பதிவுகள் நீக்கப்பட்டதற்கு, அவர் விதிகளை மீறியதாக டுவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
2. டெல்லியில் போராடுவது விவசாயிகள் அல்ல- கங்கனா ரனாவத் டுவிட்
டெல்லியில் போராடுவது விவசாயிகள் அல்ல, நாட்டை பிளவுபடுத்தும் பயங்கரவாதிகள் என நடிகை கங்கனா ரனாவத் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
3. கங்கனா ரனாவத், அவரது சகோதரிக்கு மும்பை போலீசார் சம்மன் விடுத்துள்ளதாக தகவல்
மும்பையை ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசியதால் கங்கனா ரனாவத்திற்கும் சிவசேனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
4. அதிரடி கதாநாயகியாக உருவாகும் கங்கனா ரனாவத்; தீவிர சண்டை பயிற்சி
அடுத்தடுத்து நடிக்கும் 2 ஆக்சன் திரைப்படங்களுக்காக தீவிர சண்டை பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோவை நடிகை கங்கனா ரனாவத் வெளியிட்டுள்ளார்.