சினிமா செய்திகள்

வடிவேல் பாலாஜியின் திடீர் மறைவு பேரதிர்ச்சி அளிக்கிறது - நடிகர் விவேக் இரங்கல் + "||" + The sudden demise of Vadivelu Balaji is traumatic

வடிவேல் பாலாஜியின் திடீர் மறைவு பேரதிர்ச்சி அளிக்கிறது - நடிகர் விவேக் இரங்கல்

வடிவேல் பாலாஜியின் திடீர் மறைவு பேரதிர்ச்சி அளிக்கிறது - நடிகர் விவேக் இரங்கல்
நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜியின் திடீர் மறைவு பேரதிர்ச்சி அளிக்கிறது என்று நடிகர் விவேக் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,

நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடிகர் வடிவேல் பாலாஜி நடித்துள்ளார். இவர் 15 நாட்களுக்கு முன்னர் திடீர் மாரடைப்பு காரணமாக இரு கைகளும் வாதத்தில் முடங்கி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.


தொடர் சிகிச்சைக்குப் பின்னர் போதிய வசதி இல்லாத காரணத்தால் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட வடிவேல் பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 45 வயதான வடிவேலு பாலாஜிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். விஜய் டிவியில் இவர் பங்கேற்று நடித்த 'அது இது எது' நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அவரது மரணம் குடும்பத்தாரையும், திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமூகவலைதளங்களில் ரசிகர்கள் பலரும் வடிவேல் பாலாஜிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விவேக்,  நடிகர் வடிவேல் பாலாஜியின் மறைவு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்தள்ளார். அதில், சின்னத் திரையில் மிகவும் புகழ் பெற்று விளங்கிய வடிவேல் பாலாஜியின் திடீர் மறைவு பேரதிர்ச்சியாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.

மேலும், நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், விஜய் டிவி புகழ் தீனா உள்ளிட்டவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.