சினிமா செய்திகள்

வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் சாய்பல்லவி? + "||" + Saipallavi in Vedalam Telugu remake?

வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் சாய்பல்லவி?

வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் சாய்பல்லவி?
வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி தங்கையாக சாய்பல்லவி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை,

அஜித்குமார், சுருதிஹாசன், லட்சுமிமேனன் நடித்து 2015-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் வேதாளம். சிவா இயக்கி இருந்தார். இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது.

நல்ல வசூலும் பார்த்தது. வேதாளம் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. அஜித்குமார் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. தற்போது சிரஞ்சீவி நடிப்பதாக உறுதி செய்துள்ளனர். இதில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. இந்த நிலையில் வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க சாய்பல்லவியிடம் பேசி வருகின்றனர்.

வேதாளம் படத்தில் அஜித்குமார் தங்கையாக லட்சுமிமேனன் நடித்து இருந்தார். அவரது கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி தங்கையாக சாய்பல்லவி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோல் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் சிரஞ்சீவி நடிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் பகல்-இரவு போட்டியுடன் தொடக்கம்?
இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் பகல்-இரவு போட்டியுடன் தொடங்க கூடும் என கூறப்படுகிறது.