சினிமா செய்திகள்

கங்கனாவுக்கு விஷால் ஆதரவு + "||" + Vishal supports Kangana

கங்கனாவுக்கு விஷால் ஆதரவு

கங்கனாவுக்கு விஷால் ஆதரவு
நடிகை கங்கனா ரணாவத்துக்கு விஷால் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
சென்னை,

நடிகை கங்கனா ரணாவத் மராட்டிய அரசை எதிர்த்து நிற்கிறார். மும்பை போலீசையும் விமர்சித்து வருகிறார். இதனால் ஆளும் சிவசேனா கட்சியினர் கங்கனாவுக்கு எதிராக போராட்டங்களில் குதித்துள்ளனர். மும்பையில் உள்ள கங்கனாவின் பங்களாவை இடிக்கும் முயற்சிகளும் நடந்தன. இதற்கு கோர்ட்டில் தடை பெற்றுள்ளார். இந்தி நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் பலர் கங்கனாவுக்கு எதிராக உள்ளனர்.

இந்த பிரச்சினை இந்தியா முழுவதும் கவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில் கங்கனாவுக்கு நடிகர் விஷால் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கங்கனா உங்கள் துணிச்சலை பாராட்டுகிறேன். எது சரி, எது தவறு என்பதற்கு தயங்காமல் குரல் கொடுக்கிறீர்கள். இது உங்களின் தனிப்பட்ட பிரச்சினை இல்லை. ஆனாலும் அரசின் எதிர்ப்பை எதிர்கொள்வதில் உறுதியாக இருந்தீர்கள். இது உங்களை ஒரு உதாரணம் ஆக்கி உள்ளது. 1920-களில் பகத்சிங் செய்ததற்கு நிகரான காரியம். அரசு செய்வது சரியில்லை என்றால் எதிர்த்து பேச உதாரணத்தை ஏற்படுத்தி உள்ளீர்கள். உங்களுக்கு தலை வணங்குகிறேன்.  இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டிய தீ விபத்து: மின்கசிவே 10 குழந்தைகள் உயிரிழக்க காரணம்; சுகாதார மந்திரி தகவல்
மராட்டிய அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழக்க மின்கசிவே காரணம் என சுகாதார மந்திரி தெரிவித்து உள்ளார்.
2. தெலுங்கானாவில் கனமழைக்கு 70 பேர் பலி
தெலுங்கானாவில் பெய்து வரும் கனமழை தொடர்புடைய சம்பவங்களில் சிக்கி 70 பேர் பலியாகி உள்ளனர்.
3. அசைக்க முடியாத விசுவாசத்தின் அடையாளம் வெற்றிவேல்; டி.டி.வி. தினகரன்
அசைக்க முடியாத விசுவாசத்தின் அடையாளம் வெற்றிவேல் என டி.டி.வி. தினகரன் தெரிவித்து உள்ளார்.
4. உத்தர பிரதேசத்தில் சாலை விபத்து: 3 பேர் பலி; முதல் மந்திரி இரங்கல்
உத்தர பிரதேசத்தில் சாலையில் சென்ற பேருந்து விபத்திற்குள்ளானதில் 3 பேர் பலியாகி உள்ளனர்.
5. அமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை முதல் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம்; வெள்ளை மாளிகை மருத்துவர் தகவல்
அமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை முதல் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம் என வெள்ளை மாளிகை மருத்துவர் தெரிவித்து உள்ளார்.