சினிமா செய்திகள்

மும்பை பெயரை கெடுப்பதா? கங்கனாவுடன் நக்மா மோதல் + "||" + To tarnish the name of Mumbai? Nagma clash with Kangana

மும்பை பெயரை கெடுப்பதா? கங்கனாவுடன் நக்மா மோதல்

மும்பை பெயரை கெடுப்பதா? கங்கனாவுடன் நக்மா மோதல்
மும்பை பெயரை கெடுப்பதா? என கங்கனாவுக்கு நக்மா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை,

நடிகை கங்கனா ரணாவத் இந்தி பட உலக வாரிசு நடிகர்கள் ஆதிக்கத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதுடன் மராட்டிய அரசையும் மும்பை போலீசையும் கடுமையாக சாடி வருகிறார். மும்பை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உள்ளது அங்கு எனக்கு பாதுகாப்பு இல்லை என்றும் விமர்சித்தார். இதனால் அவர் சொந்த மாநிலமான இமாசலபிரதேசத்தில் இருந்து மும்பை திரும்ப எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் எதிர்ப்பை மீறி போலீஸ் பாதுகாப்புடன் மும்பை திரும்பி உள்ளார்.

இந்த நிலையில் மும்பையை மட்டமாக பேசிய கங்கனா ரணாவத்துக்கு முன்னாள் கதாநாயகி நக்மா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “கங்கனா ரணாவத் மராட்டியம் மற்றும் மும்பையின் பெயரை கெடுத்து வருகிறார். உலக அளவில் மும்பைக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.

அதோடு இந்தி பட உலகையும் அவதூறு செய்கிறார். ஆரம்பத்தில் வாரிசு அரசியல் என்றும் இந்தி திரையுலகுக்குள் இருப்பவர்கள் வெளியே இருந்து வருபவர்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்றும் கூறினார். அதன்பிறகு மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்கிறார். இப்படி அவர் பேசுவது ஏற்கத்தக்கது அல்ல. அவதூறுகளை திட்டமிட்டு பரப்பி வருகிறார்.” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. வேளாண் சட்டங்கள் எதிர்ப்பு; திக்ரி எல்லையில் அரை நிர்வாண போராட்டத்தில் விவசாயிகள்
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திக்ரி எல்லையில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
2. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணைஆணையர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டி
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணைஆணையர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டி.
3. கொரோனா அச்சமின்றி டெல்லி-அரியானா எல்லையில் விவசாயிகள் தர்ணா போராட்டம்
வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி-அரியானா எல்லையில் கொரோனா அச்சமின்றி ஒன்றாக அமர்ந்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
4. ஐ.பி.எல். போட்டி அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்; ராகுல் டிராவிட்
ஐ.பி.எல். போட்டிக்கான அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
5. சத்தம் போட்டு பாட்டு கேட்டதற்கு எதிர்ப்பு: வாலிபர் குத்தி கொலை; 2 சகோதரர்கள் படுகாயம்
டெல்லியில் சத்தம் போட்டு பாட்டு கேட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த வாலிபர் குத்தி கொல்லப்பட்டார்.