சினிமா செய்திகள்

வடிவேல் பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி + "||" + Actor Vijay Sethupathi pays homage to Vadivelu Balaji's body

வடிவேல் பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி

வடிவேல் பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி
மறைந்த நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜியின் உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை,

நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடிகர் வடிவேல் பாலாஜி நடித்துள்ளார். இவர் 15 நாட்களுக்கு முன்னர் திடீர் மாரடைப்பு காரணமாக இரு கைகளும் வாதத்தில் முடங்கி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.


தொடர் சிகிச்சைக்குப் பின்னர் போதிய வசதி இல்லாத காரணத்தால் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட வடிவேல் பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 45 வயதான வடிவேலு பாலாஜிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவரது மரணம் குடும்பத்தாரையும், திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமூகவலைதளங்களில் ரசிகர்கள் பலரும் வடிவேல் பாலாஜிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை சேத்துப்பட்டில் நடிகர் வடிவேல் பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி செலுத்தினார். வடிவேல் பாலாஜியின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய நடிகர் விஜய் சேதுபதி நிதியுதவியும் அளித்தார். வடிவேல் பாலாஜியின் உடலுக்கு அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சக கலைஞர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வடிவேல் பாலாஜி மறைவுக்கு கார்த்தி, தனுஷ் இரங்கல்
வடிவேல் பாலாஜி மறைவுக்கு நடிகர்கள் கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவுத்துள்ளனர்.