சினிமா செய்திகள்

விஜய் பட வில்லன் வித்யூத் ஜாம்வாலுக்கு நடிகையுடன் காதல்? + "||" + Vijay movie villain Vidyut Jamwal in love with actress?

விஜய் பட வில்லன் வித்யூத் ஜாம்வாலுக்கு நடிகையுடன் காதல்?

விஜய் பட வில்லன் வித்யூத் ஜாம்வாலுக்கு நடிகையுடன் காதல்?
விஜய் பட வில்லன் வித்யூத் ஜாம்வால் தனது காதல் பற்றி கூறியுள்ளார்.
சென்னை,

விஜய்யின் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் வித்யூத் ஜாம்வால், அஜித்குமாரின் பில்லா-2. லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்த அஞ்சான் ஆகிய படங்களிலும் வில்லனாக நடித்து இருந்தார்.

இந்தியில் புல்லட் ராஜா, கமாண்டோ, ஜங்கிளி உள்பட பல படங்களில் நடித்து முன்னணி வில்லன் நடிகராக இருக்கிறார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். அவர் நடிகை அடா சர்மா பற்றி கூறும்போது, “எனக்கு அவர் தோழி மட்டுமல்ல. நாங்கள் ஒருவருக்கொருவர் அன்பானவர்கள், அக்கறை கொண்டவர்கள். அடா சர்மா போல் ஒருவரை விரும்புகிறேன்” என்று தெரிவித்து இருந்தார். தற்போது அவர் அளித்துள்ள இன்னொரு பேட்டியில், “நான் காதலில் இருக்கிறேன். இப்போதுதான் அந்த பெண்ணை காதலிக்க ஆரம்பித்து இருக்கிறேன்” என்று கூறியுள்ளார். இதையடுத்து வித்யூத் ஜாம்வால் காதலிக்கும் பெண் நடிகை அடா சர்மாதான் என்றும், காதலை மறைமுகமாக உறுதிப்படுத்தி உள்ளார் என்றும் இந்தி பட உலகில் பேசப்படுகிறது. அடா சர்மா தமிழில் பிரபுதேவாவுடன் சார்லி சாப்ளின்-2 படத்தில் நடித்துள்ளார். சிம்புவின் இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு ஆடி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரசில் மாமியார், மருமகன்கள் சண்டைகள் நடந்து வருகின்றன; ஜே.பி. நட்டா பேச்சு
நமக்கு பா.ஜ.க. குடும்பம் என்றும் ஆனால் சிலருக்கு, குடும்பமே கட்சியாக உருமாறி உள்ளது என்றும் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.
2. ஏழைகளுக்கு 6 மாத ஆட்சியில் ரூ.23 ஆயிரம் கோடி வழங்கி உள்ளேன்; மத்திய பிரதேச முதல் மந்திரி
எனது 6 மாத கால ஆட்சியில் ஏழைகளுக்கு ரூ.23 ஆயிரம் கோடி வழங்கி உள்ளேன் என்று மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
3. மராட்டியத்தில் தீபாவளிக்கு முன் பள்ளிகள் திறக்கப்படாது; பள்ளி கல்வி மந்திரி
மராட்டியத்தில் தீபாவளி பண்டிகைக்கு முன் பள்ளி கூடங்கள் திறக்கப்படாது என்று பள்ளி கல்வி மந்திரி வர்ஷா கெய்க்வாட் கூறியுள்ளார்.
4. ஆண்களுக்கு பெண்களை மதிக்க கற்றுக்கொடுங்கள்; நடிகை ஆண்ட்ரியா
ஆண்களுக்கு பெண்களை மதிக்க கற்றுக்கொடுங்கள் என்று நடிகை ஆண்ட்ரியா கூறியுள்ளார்.
5. ஜனநாயக படுகொலை நடந்த இன்றைய தினம் வரலாறில் கருப்பு நாளாக இருக்கும்; காங்கிரஸ் எம்.பி. பேட்டி
ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்ட இன்றைய தினம் வரலாறில் கருப்பு நாளாக இருக்கும் என காங்கிரஸ் எம்.பி. அகமது பட்டேல் கூறியுள்ளார்.