சினிமா செய்திகள்

மருத்துவ காரணங்களுக்காக நான் தினமும் பசு கோமியம் குடிக்கிறேன்; அக்‌ஷய்குமார் + "||" + For medical reasons I drink cow dung daily; Akshay Kumar

மருத்துவ காரணங்களுக்காக நான் தினமும் பசு கோமியம் குடிக்கிறேன்; அக்‌ஷய்குமார்

மருத்துவ காரணங்களுக்காக நான் தினமும் பசு கோமியம் குடிக்கிறேன்; அக்‌ஷய்குமார்
மருத்துவ காரணங்களுக்காக நான் தினமும் பசு கோமியம் குடிக்கிறேன் என நடிகர் அக்‌ஷய்குமார் கூறியுள்ளார்.
தமிழில் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்தவர் அக்‌ஷய்குமார். இந்தியில் முன்னணி நடிகராக இருக்கிறார். தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கி உள்ள காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கான லட்சுமி பாம் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் டிஸ்கவரி சேனலில் பிரபலமாக உள்ள மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் அக்‌ஷய்குமார் பங்கேற்று உள்ளார்.

இதன் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் மற்றும் அக்‌ஷய்குமார் பங்கேற்ற படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் பந்தியூர் வனப்பகுதியில் நடந்தபோது பியர் கிரில்ஸ் யானை சாணத்தில் டீ போட்டு கொடுத்ததை அக்‌ஷய்குமார் குடித்துள்ளார்.

பெல்பாட்டம் இந்தி படப்பிடிப்புக்காக ஸ்காட்லாந்தில் முகாமிட்டுள்ள அக்‌ஷய்குமார் இன்ஸ்டாகிராம் நேரலையில் கலந்துரையாடியபோது யானை சாணத்தில் டீ குடிக்க உங்களை பியர் கிரில்ஸ் எப்படி சம்மதிக்க வைத்தார் என்று நடிகை கியூமா குரோஷி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அக்‌ஷய்குமார் “பியர் கிரில்ஸ் அதை குடிக்க சொன்னதும் நான் கவலை கொள்ளவில்லை. மகிழ்ச்சி அடைந்தேன். காரணம் நான் தினமும் ஆயுர்வேத மருத்துவ காரணங்களுக்காக பசு கோமியத்தை குடித்து வருகிறேன். எனவே யானை சாணத்தில் போட்ட தேநீரை அருந்துவது பிரச்சினையாக தெரியவில்லை” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. காதலர் தினத்தில் 15 நக்சலைட்டுகளுக்கு திருமணம் செய்து வைத்த போலீசார்
சத்தீஷ்காரில் காதலர் தினத்தில் 15 நக்சலைட்டுகளுக்கு போலீசார் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
2. இந்தியா 20 லட்சம் கோடி அளவுக்கு உற்பத்தியை விரிவாக்கம் செய்யும்: மத்திய மந்திரி உரை
இந்தியா 20 லட்சம் கோடி அளவுக்கு உற்பத்தியை விரிவாக்கம் செய்யும் என மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
3. உத்தரகாண்டில் பனிச்சரிவு; 26 உடல்கள் மீட்பு, 171 பேர் மாயம்: டி.ஜி.பி. பேட்டி
உத்தரகாண்டில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன என டி.ஜி.பி. பேட்டியில் கூறியுள்ளார்.
4. பாகிஸ்தானிடம் இருந்து ஆயுதங்கள், போதை பொருள் சப்ளை: பயங்கரவாத அமைப்பின் தளபதி திடுக் தகவல்
பாகிஸ்தானிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் போதை பொருட்கள் சப்ளை செய்யப்படுகின்றன என கைது செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் தளபதி அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளார்.
5. காஷ்மீரில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது; விமானி மரணம்
காஷ்மீரில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் காயமடைந்த விமானி ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.