சினிமா செய்திகள்

மாஸ்டர்’ படத்தை ஓடிடி-யில் வெளியிட படக்குழு முடிவு என தகவல் + "||" + Information that the film crew has decided to release Master's film on ODT

மாஸ்டர்’ படத்தை ஓடிடி-யில் வெளியிட படக்குழு முடிவு என தகவல்

மாஸ்டர்’ படத்தை ஓடிடி-யில் வெளியிட படக்குழு முடிவு என தகவல்
திரையரங்குகள் திறக்கப்படாததால் ‘மாஸ்டர்’ படத்தை ஓடிடி-யில் வெளிவருவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை,

கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில், பல்வேறு திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்படுகின்றன.  'பொன்மகள் வந்தாள்', 'பெண்குயின்' தொடங்கி நிறைய தமிழ்ப் படங்கள் இதுவரை ஓடிடி-யில் ரிலீஸாகியுள்ளன.


தற்போது சூர்யாவின் 'சூரரைப் போற்று', விஜய் சேதுபதியின் 'க.பெ.ரணசிங்கம்' போன்ற பெரிய ஹீரோக்களின் படங்களும் ஓடிடி-யில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படமும் ஓடிடி-யில் ரிலீஸாக இருப்பதாகவும், அமேசானுடன் பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்த அதிகாரபூர்வத் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.