சினிமா செய்திகள்

வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி, விரைவில் அருமையான என்ட்ரி - நடிகர் வடிவேலு + "||" + Thanks to the congratulating fans, fantastic entry soon

வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி, விரைவில் அருமையான என்ட்ரி - நடிகர் வடிவேலு

வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி, விரைவில் அருமையான என்ட்ரி - நடிகர் வடிவேலு
வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி, விரைவில் அருமையான என்ட்ரி என்று நடிகர் வடிவேலு கூறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,

தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிகர்ளுக்கு நன்றி கூறி நடிகர் வடிவேலு வெளியிட்டுள்ள வீடியோவில்,

செப்டம்பர் 12 என்னுடைய பிறந்தநாள். நான் வந்து தினமும் மக்களை சிரிக்க வைக்கணும் தினமும் நான் பிறந்து கொண்டு தான் இருக்கிறேன். ஒவ்வொரு குடும்பத்திலும் நகைச்சுவை செல்வமாக நான் பிறந்துகொண்டிருக்கிறேன். முதலில் நான் எனது அம்மாவுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். என் குல சாமியை கும்பிட்டுக்கிறேன்.


இவ்வளவுக்கும் காரணம் மக்கள் சக்திதான். மக்கள் சக்தி இல்லாமல் இந்த வடிவேலு கிடையாது. இன்னும் சொல்லப் போனால் எங்க அம்மா என்னை பெற்றெடுக்கவில்லை என்றால் நானே கிடையாதுனு வச்சுக்குங்களேன். எங்க அம்மாவுக்குப் பிறகு மக்கள் தான். அந்த மக்களால் தான் நான் மக்களை சிரிக்க வச்சுகிட்டு மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

இன்னொரு கேள்விகூட நீங்கள் கேட்கலாம். என்ன கேட்கலாம், ஏன் இவரு இன்னும் நடிக்காம இருக்காரு? ஏன் ஏன் நடிக்கமாட்டிங்கறீங்கனு கேட்கலாம். ஒன்னுமே இல்ல. சீக்கிரம் ஒரு மிகப்பெரிய அருமையான ஒரு எண்ட்ரியோட நான் வருவேன். வாழ்க்கைன்னா எங்க இருந்தாலும் ஒரு சகுனி  இருக்கத்தான் செய்யும். அது எல்லார் வாழ்க்கையிலும் உண்டு.

அது என் வாழ்க்கையில் இல்லாமல் இருக்குமா? அங்கங்க அங்கங்க ரெண்டுரெண்டு இருக்கத்தான் செய்யும் என்று நகைச்சுவையுடன் கூறினார்.
இந்த வீடியோ கடந்த ஆண்டு வெளியானது என சமூகவலைதளங்களில் கூறப்படுகிறது.