சினிமா செய்திகள்

வாழ்க்கையில் பெரிய இடத்துக்கு வரதுக்கு தோல்வி ரொம்ப முக்கியம் - ஜி.வி.பிரகாஷ் டுவீட் + "||" + Failure is very important G.V.Prakash Kumar

வாழ்க்கையில் பெரிய இடத்துக்கு வரதுக்கு தோல்வி ரொம்ப முக்கியம் - ஜி.வி.பிரகாஷ் டுவீட்

வாழ்க்கையில் பெரிய இடத்துக்கு வரதுக்கு தோல்வி ரொம்ப முக்கியம் - ஜி.வி.பிரகாஷ் டுவீட்
வாழ்க்கையில் பெரிய இடத்துக்கு வரதுக்கு தோல்வி ரொம்ப முக்கியம் என்று இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.
சென்னை,

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

வெற்றியோ தோல்வியோ அத சரி சமமா பார்க்க கத்துக்கோங்க. தோல்வி இல்லாத லைப் இண்ட்ர்ஸ்ட்டா இருக்காது. வாழ்க்கையில பெரிய இடத்துக்கு வரதுக்கு தோல்வி ரொம்ப முக்கியம். இந்த ஒரு  பரிட்சைல தோத்தா, வாழ்க்கையில தோத்ததா அர்த்தம் இல்ல. வாழ்க்கை ரொம்ப பெருசு. தற்கொலை எதுக்குமே முடிவு கிடையாது.


இதே நீட் தேர்வுக்காக ஏற்கெனவே நாம் அனிதாவை இழந்துள்ளோம். ஆனால் தற்போது ஒரே நாளில் மூன்று பேரை இழந்துள்ளோம். இதைவிட கொடுமையான நாள் இருக்கவே முடியாது. மதுரை, தர்மபுரி, ஆதித்யா, நாமக்கல் மூர்த்திலால் என 3 பேர் நீட் தேர்வால் உயிரிழந்துள்ளனர். I am Tired என ஒரு மாணவி கடிதம் எழுதி விட்டு தற்கொலை செய்து கொள்ள இந்த சமூகமே காரணம்.

முதலில் பெற்றோர் பிள்ளைகளை புரிந்து கொள்ளுங்கள். தோற்றால் தட்டிக்கொடுங்கள். நீங்கள் தான் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ஒரு தேர்வு உங்களுடைய குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்காது.

குழந்தைகளை புரிந்து கொள்ளுங்கள். ஒரு உயிர் போனதென்றால் எல்லாமே போச்சு. எதையும் எதிர்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.