சினிமா செய்திகள்

போதையின் அடிமை ரியா; கங்கனா ரணாவத் + "||" + Ria, a drug addict; Kangana Ranaut

போதையின் அடிமை ரியா; கங்கனா ரணாவத்

போதையின் அடிமை ரியா; கங்கனா ரணாவத்
போதை அடிமையுடன் என்னை ஒப்பிட வேண்டாம் என்று ரியாவை குறிப்பிட்டு நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.
நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு விசாரணையில் அவரது காதலி ரியா சக்கரவர்த்தியின் வாட்ஸ் அப் உரையாடலை ஆய்வு செய்த போலீசார் போதை பொருள் கும்பலுடன் அவருக்கு தொடர்பு இருப்பதை கண்டுபிடித்து கைது செய்தனர். நடிகை கங்கனா ரணாவத் கூறும்போது, “இந்தி திரையுலகில் கொக்கைன் போதை பொருள் தாராளமாக புழங்குகிறது. இந்த போதை பொருள் அதிக விலை கொண்டது. முன்னணி நடிகர்களின் வீடுகளில் நடக்கும் விருந்துகளில் இந்த போதை பொருளை இலவசமாக வழங்குகிறார்கள். நடிகர் நடிகைகளுக்கு ரத்த பரிசோதனை செய்தால் பலர் சிக்குவார்கள்” என்றார். இந்த நிலையில் ரியாவுக்கு ஆதரவாக பேசி வரும் வாரிசு நடிகையான சோனம்கபூர் மராட்டிய அரசையும் மும்பை போலீசையும் விமர்சித்த கங்கனாவின் பங்களா இடிக்கப்பட்டதை கண்டிக்கும் வகையில் ரியாவையும் கங்கனாவையும் ஒப்பிட்டு கருத்து தெரிவித்தார். டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், “கண்ணுக்கு கண் என்பதுதான் தீர்வு என்பதாக இருந்தால் உலகமே குருடாகி விடும்’‘என்று தெரிவித்து இருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள கங்கனா ரணாவத், “மாபியா முட்டாள்கள் திடீரென்று ரியாவோடு சேர்த்து எனக்கும் நீதி கேட்க தொடங்கி உள்ளனர். மக்களுக்காக நான் போராடுகிறேன். சிறிய போதை அடிமையுடன் என்னை ஒப்பிட வேண்டாம்.” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரசில் மாமியார், மருமகன்கள் சண்டைகள் நடந்து வருகின்றன; ஜே.பி. நட்டா பேச்சு
நமக்கு பா.ஜ.க. குடும்பம் என்றும் ஆனால் சிலருக்கு, குடும்பமே கட்சியாக உருமாறி உள்ளது என்றும் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.
2. ஏழைகளுக்கு 6 மாத ஆட்சியில் ரூ.23 ஆயிரம் கோடி வழங்கி உள்ளேன்; மத்திய பிரதேச முதல் மந்திரி
எனது 6 மாத கால ஆட்சியில் ஏழைகளுக்கு ரூ.23 ஆயிரம் கோடி வழங்கி உள்ளேன் என்று மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
3. மராட்டியத்தில் தீபாவளிக்கு முன் பள்ளிகள் திறக்கப்படாது; பள்ளி கல்வி மந்திரி
மராட்டியத்தில் தீபாவளி பண்டிகைக்கு முன் பள்ளி கூடங்கள் திறக்கப்படாது என்று பள்ளி கல்வி மந்திரி வர்ஷா கெய்க்வாட் கூறியுள்ளார்.
4. ஆண்களுக்கு பெண்களை மதிக்க கற்றுக்கொடுங்கள்; நடிகை ஆண்ட்ரியா
ஆண்களுக்கு பெண்களை மதிக்க கற்றுக்கொடுங்கள் என்று நடிகை ஆண்ட்ரியா கூறியுள்ளார்.
5. ஜனநாயக படுகொலை நடந்த இன்றைய தினம் வரலாறில் கருப்பு நாளாக இருக்கும்; காங்கிரஸ் எம்.பி. பேட்டி
ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்ட இன்றைய தினம் வரலாறில் கருப்பு நாளாக இருக்கும் என காங்கிரஸ் எம்.பி. அகமது பட்டேல் கூறியுள்ளார்.