சினிமா செய்திகள்

தமிழ் பட நடிகருக்கு கொரோனா + "||" + Corona for Tamil film actor

தமிழ் பட நடிகருக்கு கொரோனா

தமிழ் பட நடிகருக்கு கொரோனா
தமிழ் பட நடிகருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், விஷால், நடிகைகள் ஐஸ்வர்யாராய், நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன் டி.வி நடிகர் ரவிகிருஷ்ணா, டி.வி நடிகை நவ்யா சாமி உள்ளிட்ட நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் பலர் கொரோனா தொற்றில் சிக்கி குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் பிரபல இந்தி நடிகர் அப்தாப்பும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார். இவர் தமிழில் சித்திக் இயக்கத்தில் அரவிந்தசாமி, அமலாபால் நடித்து 2018-ல் திரைக்கு வந்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் அமலாபால் கணவராக நடித்து இருந்தார். இந்தியில் அதிக படங்களில் நடித்துள்ளார். காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டு பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதுகுறித்து அப்தாப் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘’எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவர்கள் ஆலோசனையோடு வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். வெளியே செல்லும்போது முக கவசம் அணியுங்கள். நமது உயிரை காப்பாற்றிக்கொள்ள நாம்தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கொரோனாவுக்கு எதிராக அனைவரும் இணைந்து போராடுவோம்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியில் 5 பேரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு; ஜிப்மர் மருத்துவமனை ஆய்வில் தகவல்
புதுச்சேரியில் 5 பேரில் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2. டெல்லி திகார் சிறை பொது இயக்குனருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
டெல்லியில் உள்ள திகார் சிறை பொது இயக்குனருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. தமிழகத்தில் புதிதாக 5,337 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் புதிதாக 5,337 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.14 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.14 கோடியாக உயர்ந்துள்ளது.
5. தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.