சினிமா செய்திகள்

சிகப்பு ரோஜாக்கள் 2-ல் கமல், சிம்பு ? + "||" + Kamal and Simbu in Red Roses 2?

சிகப்பு ரோஜாக்கள் 2-ல் கமல், சிம்பு ?

சிகப்பு ரோஜாக்கள் 2-ல் கமல், சிம்பு ?
சிகப்பு ரோஜாக்கள் 2-ம் பாகத்தில் சிம்புவை நாயகனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் பரவி வருகிறது.
கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்து பாரதிராஜா இயக்கத்தில் 1978-ல் வெளியான படம் சிகப்பு ரோஜாக்கள். ஆண்களை மயக்கி ஆசை வலையில் வீழ்த்தும் பெண்களை தேடிப்பிடித்து கொலை செய்து வீட்டு தோட்டத்தில் புதைக்கும் சைக்கோ கொலையாளி பற்றிய கதை. இளையராஜா இசையில் படத்தில் இடம்பெற்ற நினைவோ ஒரு பறவை, இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது போன்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தன. இந்த படத்தின் இரண்டாம் பாகம் பற்றி அடிக்கடி தகவல்கள் வருகின்றன. 2-ம் பாகத்தை பாரதிராஜா மகன் மனோஜ் இயக்க முயற்சிப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. பின்னர் பாரதிராஜாவே இயக்க இருப்பதாக தகவல் கசிந்தது. கதாநாயகியை மையமாக வைத்து திரைக்கதையில் மாற்றம் செய்து இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சிகப்பு ரோஜாக்கள் 2-ம் பாகத்தில் சிம்புவை நாயகனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் பரவி வருகிறது. இதில் கமல்ஹாசனையும் கவுரவ தோற்றத்தில் நடிக்க வைக்க அணுகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.