சினிமா செய்திகள்

நீட் தேர்வு விவகாரம்: நடிகர் சூர்யாவுக்கு காயத்ரி ரகுராம் எதிர்ப்பு + "||" + NEET issue: Gayatri Raghuram protests against actor Surya

நீட் தேர்வு விவகாரம்: நடிகர் சூர்யாவுக்கு காயத்ரி ரகுராம் எதிர்ப்பு

நீட் தேர்வு விவகாரம்:  நடிகர் சூர்யாவுக்கு காயத்ரி ரகுராம் எதிர்ப்பு
நீட் தேர்வு விவகாரத்தில் நடிகர் சூர்யாவுக்கு காயத்ரி ரகுராம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து நீட் தேர்வை ரத்து செய்யும்படி அரசியல் கட்சியினரும், திரையுலகினரும் வற்புறுத்தினர். நடிகர் சூர்யா நீட் தேர்வு முறையை கடுமையாக கண்டித்தார். அவர் கூறும்போது, “நீட் போன்ற ‘மனுநீதி’ தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது. அப்பாவி மாணவர்களின் மரணங்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கக்கூடாது. நீட் தேர்வுக்கு எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம்?” என்றார். சூர்யா கருத்துக்கு பா.ஜனதா பிரமுகரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது ரசிகர்கள் தங்கள் சொந்த செலவில் பேனர் வைத்து கொண்டாடுகிறார்கள். அப்போது பேனர் தவறி விழுந்து சில ரசிகர்கள் உயிர் இழந்துள்ளனர். இதற்காக சினிமாவை தடை செய்யலாமா? தேர்வை தைரியமாக எதிர்கொள்ள மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். நோயாளிகளை கவனிக்கும் மருத்துவர்களுக்கு தினமும் பரீட்சைத்தான்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நூறு நாளில் நீட் தேர்வு, கல்விக்கடன் ரத்து; உதயநிதி ஸ்டாலின் பேச்சு
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நூறு நாளில் தனி அமைச்சகம் அமைத்து நீட்தேர்வு கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என க. பரமத்தியில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
2. தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.ம.மு.க.வினர் மறியல் செய்ய முயற்சி
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.ம.மு.க.வினர் மறியல் செய்ய முயன்றனர். அவர்களை போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
3. 63 வேலம்பாளையம், புதுப்பாளையம் பகுதிகளில் டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
பல்லடம் அறிவொளி நகர் 63 வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
4. நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ், ஆதரித்தது திமுக - முதலமைச்சர் பழனிசாமி
நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் என்றும், ஆதரித்தது திமுக என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
5. தொழில் பூங்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடு,வீடாக துண்டு பிரசுரம் வினியோகம்
சேவூர் அருகே அமைய உள்ள தொழில் பூங்கா வுக்கு (சிப்காட்) எதிர்ப்பு தெரிவித்து வீடு,வீடாக சென்று பொதுமக்கள் துண்டு பிரசுரம் வழங்கினார்கள்.