சினிமா செய்திகள்

“நான் பெரிய அழகி இல்லை”; நடிகை சமந்தா + "||" + "I'm not a big beauty"; Actress Samantha

“நான் பெரிய அழகி இல்லை”; நடிகை சமந்தா

“நான் பெரிய அழகி இல்லை”; நடிகை சமந்தா
நான் பெரிய அழகி இல்லை என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.


தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா அளித்துள்ள பேட்டி வருமாறு:-

“சமந்தா நீ ரொம்ப அழகாய் இருக்கிறாய். ராணி மாதிரி தெரிகிறாய் என்றெல்லாம் என்னை பார்த்து பலர் சொல்கிறார்கள். ஆனால் நான் ஒன்றும் பெரிய அழகி இல்லை. மேக்கப் போட்டு, நல்ல ஆடைகள் அணியவைத்து கேமரா முன்னால் நிற்க வைத்தால் எனது வயது இருக்கும் எல்லா பெண்களுமே அழகாய்த்தான் இருப்பார்கள். எனக்கு கல்லூரி நாட்களில் அழகாய் இருக்க வேண்டும் என்பதில் ஆர்வம் இருந்தது. வரவர அழகின் மீதான ஈர்ப்பு குறைந்து விட்டது. இரண்டு மூன்று ஆண்டுகள் போனால் இந்த அழகு, மென்மை எல்லாம் போய் விடும். அதனால் நான் அழகை பற்றி கண்டு கொள்வது இல்லை. ஒவ்வொருவருக்கும் அவர்களின் நல்ல குணாதிசயம்தான் முக்கியம். வயது ஏற அழகு குறையலாம். ஆனால் கேரக்டர் மட்டும் சாகும்வரை மாறாது. நம்மால் மற்றவர்களுக்கு என்ன உதவி செய்ய முடியும் என்று சிந்திப்பேன். கெட்டது மட்டும் நம்மால் யாருக்கும் நடக்க கூடாது என்பதில் கவனமாக இருப்பேன்.”  இவ்வாறு சமந்தா கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜனநாயக படுகொலை நடந்த இன்றைய தினம் வரலாறில் கருப்பு நாளாக இருக்கும்; காங்கிரஸ் எம்.பி. பேட்டி
ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்ட இன்றைய தினம் வரலாறில் கருப்பு நாளாக இருக்கும் என காங்கிரஸ் எம்.பி. அகமது பட்டேல் கூறியுள்ளார்.
2. போதையின் அடிமை ரியா; கங்கனா ரணாவத்
போதை அடிமையுடன் என்னை ஒப்பிட வேண்டாம் என்று ரியாவை குறிப்பிட்டு நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.
3. ராகுல் காந்தி பிரதமரானால் நீட் தேர்வு ரத்து; புதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமி பேட்டி
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து ராகுல் காந்தி பிரதமரானால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று புதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமி பேட்டியில் கூறியுள்ளார்.
4. மருத்துவ காரணங்களுக்காக நான் தினமும் பசு கோமியம் குடிக்கிறேன்; அக்‌ஷய்குமார்
மருத்துவ காரணங்களுக்காக நான் தினமும் பசு கோமியம் குடிக்கிறேன் என நடிகர் அக்‌ஷய்குமார் கூறியுள்ளார்.
5. விஜய் பட வில்லன் வித்யூத் ஜாம்வாலுக்கு நடிகையுடன் காதல்?
விஜய் பட வில்லன் வித்யூத் ஜாம்வால் தனது காதல் பற்றி கூறியுள்ளார்.