சினிமா செய்திகள்

கொரோனா சிகிச்சை பெற்று வந்த நடிகர் ஃப்ளோரண்ட் பெரேரா மரணம் + "||" + Actor Florent Pereira dies after receiving corona treatment

கொரோனா சிகிச்சை பெற்று வந்த நடிகர் ஃப்ளோரண்ட் பெரேரா மரணம்

கொரோனா சிகிச்சை பெற்று வந்த நடிகர் ஃப்ளோரண்ட் பெரேரா மரணம்
கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ஃப்ளோரண்ட் பெரேரா உயிரிழந்தார்.
சென்னை,

தமிழ் திரைப்பட நடிகரும், மூத்த ஊடகவியலாளருமான நடிகர் ஃப்ளோரண்ட் பெரேரா கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று உயிரிழந்தார். பிரபல தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் முக்கிய பொறுப்புகளில் இருந்து வந்த இவர், நடிகர் விஜய்யின் ‘புதிய கீதை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.


அதனை தொடர்ந்து தனுஷின் தொடரி, வேலையில்லா பட்டதாரி 2, தரமணி, தர்மதுரை, முப்பரிமாணம், கயல் உள்ளிட்ட பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த சினிமா படப்பிடிப்புகள், தமிழக அரசின் அனுமதியின் பேரில் அண்மையில் மீண்டும் தொடங்கப்பட்டது.

இதனையடுத்து புதிய திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமாகியிருந்த நடிகர் ஃப்ளோரண்ட் பெரேரா, கடந்த 10 நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அவரது உடல்நிலை திடீரென்று மோசமானதையடுத்து, நேற்று சிகிச்சை பலனின்றி ஃப்ளோரண்ட் பெரேரா உயிரிழந்தார்.

இவரது மரணத்திற்கு நடிகர் ஷாந்தனு பாக்யராஜ், இயக்குனர் சீனு ராமசாமி உள்ளிட்ட திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆயுதப்படை போலீஸ்காரர்கள் உள்பட 106 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,544 ஆக உயர்ந்தது
வேலூர் ஆயுதப்படை போலீஸ்காரர்கள் 2 பேர் உள்பட 106 பேருக்கு ஒரேநாளில் கொரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் வேலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,544 ஆக உயர்ந்துள்ளது.
2. சேலம் மாவட்டத்தில் 291 பேருக்கு கொரோனா பாதிப்பு 7 பேர் பலி
சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 291 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. தர்மபுரி மாவட்டத்தில் ஒரே நாளில் 2 டாக்டர்கள் உள்பட 65 பேருக்கு கொரோனா
தர்மபுரி மாவட்டத்தில் ஒரே நாளில் 2 டாக்டர்கள் உள்பட 65 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
4. உயிரிழப்பை கட்டுப்படுத்த குமரியில் 12,500 முதியவர்களுக்கு கொரோனா பரிசோதனை 2 கட்டமாக நடந்தது
குமரி மாவட்டத்தில் கொரோனா உயிரிழப்பை கட்டுப்படுத்துவதற்காக 2 கட்டமாக 12,500 முதியவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
5. கரூர் மாவட்டத்தில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று
கரூர் மாவட்டத்தில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...