சினிமா செய்திகள்

படத்தில் நடிக்க வைப்பதாக விஜய்தேவரகொண்டா பெயரில் மோசடி + "||" + Fraud in the name of Vijay Thevarakonda for casting in the film

படத்தில் நடிக்க வைப்பதாக விஜய்தேவரகொண்டா பெயரில் மோசடி

படத்தில் நடிக்க வைப்பதாக விஜய்தேவரகொண்டா பெயரில் மோசடி
படத்தில் நடிக்க வைப்பதாக விஜய்தேவரகொண்டா பெயரில் மோசடி செய்யப்பட்டு உள்ளது.
தமிழில் வெளியான நோட்டா படத்தில் கதாநாயகனாக நடித்தவர் விஜய் தேவரகொண்டா, இவரது டியர் காமரேட் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியானது. அர்ஜூன் ரெட்டி தெலுங்கு படத்தின் வெற்றிக்கு பிறகு ஆந்திராவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார். தற்போது பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சில பட நிறுவனங்கள் விஜய்தேவரகொண்டாவை கதாநாயகனாக வைத்து புதிய படம் தயாரிப்பதாக சொல்லி கதாநாயகி மற்றும் பிற நடிகர், நடிகைகள் தேர்வை நடத்தி வந்தன. இதில் பணமோசடி நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை விஜய்தேவரகொண்டா கண்டித்துள்ளார். அவர் தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், “சில பட நிறுவனங்கள் விஜய்தேவரகொண்டாவை வைத்து படம் எடுப்பதாக பொய்யான தகவலை சொல்லி நடிகர் நடிகைகள் தேர்வு நடத்துவதை அறிந்தோம். இதுபோன்ற மோசடி பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவர்களை போன்றவர்களிடம் யாரும் ஏமாற வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஏற்காடு ஒன்றியத்தில் தனிநபர் கழிப்பிடம் கட்டும் திட்டத்தில் ரூ.2½ லட்சம் மோசடி
ஏற்காடு ஒன்றியத்தில் தனிநபர் கழிப்பிடம் கட்டும் திட்டத்தில் ரூ.2 லட்சத்து 58 ஆயிரம் மோசடி செய்தது தொடர்பாக பெண் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 5 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக தச்சு தொழிலாளியிடம் ரூ.1¼ லட்சம் மோசடி தாய்-மகன் உள்பட 3 பேர் மீது வழக்கு
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, தச்சு தொழிலாளியிடம் ரூ.1¼ லட்சம் மோசடி செய்ததாக தாய்-மகன் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
3. தனியார் நிதி நிறுவனம் நடத்தி ரூ.20 லட்சம் மோசடி செய்த மேலும் ஒருவர் கைது
நிதி நிறுவனம் நடத்தி ரூ.20 லட்சம் மோசடி செய்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
4. வங்கி கணக்கில் இருந்து ரூ.47.60 லட்சம் மோசடி சென்னையில் அதிகாரி உள்பட 2 பேர் கைது
இறந்துபோன வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து நூதனமான முறையில் ரூ.47.60 லட்சம் பணத்தை மோசடி செய்த முன்னாள் வங்கி அதிகாரி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. சினிமாவில் வாய்ப்பு தருவதாக பிரபல டைரக்டர் பெயரில் நடிகைகளிடம் மோசடி
அல்போன்ஸ் புத்திரன் பெயரில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக துணை நடிகைகளிடமும், இளம் பெண்களிடமும் மோசடி நடக்கும் தகவல் வெளியாகி உள்ளது.