சினிமா செய்திகள்

"எவனென்று நினைத்தாய்" கமல்ஹாசன் அடுத்த படம் குறித்த அறிவிப்பு, லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் + "||" + lokesh kanagaraj kamalhaasan film EvanenRu ninaithi

"எவனென்று நினைத்தாய்" கமல்ஹாசன் அடுத்த படம் குறித்த அறிவிப்பு, லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்

"எவனென்று நினைத்தாய்" கமல்ஹாசன் அடுத்த படம் குறித்த அறிவிப்பு, லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்
கமல்ஹாசன் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. படத்திற்கு "எவனென்று நினைத்தாய்" என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
சென்னை

கைதி மற்றும் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ்  கமல்ஹாசனை இயக்குகிறார். கமல்ஹாசன் நடிக்கும் 232 படத்திற்கு "எவனென்று நினைத்தாய்" என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை முடித்து விட்டார். அதனை தொடர்ந்து அவர் யாருடன் கூட்டணி சேர இருக்கிறார் என்பது இன்னும் கேள்விக் குறியாகவே இருந்தது. ரஜினி மற்றும் கமல் ஆகியோருடன் தனது அடுத்த படத்திற்காக லோகேஷ் கூட்டணி சேர உள்ளார் என சில மாதங்களாகவே கூறப்பட்டு வரும் நிலையில், அது பற்றிய எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவராமல் இருந்தது.

இந்நிலையில் நேற்று மாலை லோகேஷ் கனகராஜ் பதிவிட்டிருந்த ட்விட்டில் தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட போவதாக அறிவித்திருந்தார்.

லோகேஷ் கனகராஜ்  கமல்ஹாசனை இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கமல்ஹாசன் நடிக்கும் 232 படத்திற்கு "எவனென்று நினைத்தாய்" என பெயர் சூட்டப்பட்டுள்ளது.இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது.
தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டக்கூடாது கமல்ஹாசன் அறிக்கை
கொரோனாவை கட்டுப்படுத்துவதிலும், நோயாளிகளை குணப்படுத்துவதிலும் ஆட்சியாளர்கள் அலட்சியம் செய்யக்கூடாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
2. தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரத்தை பாதுகாப்பதில் தேர்தல் ஆணையம் சரியாக செயல்படவில்லை கமல்ஹாசன் புகார்
தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரத்தை பாதுகாப்பதில் தேர்தல் ஆணையம் சரியாக செயல்படவில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் புகார் கூறியுள்ளார்.
3. அரசியல் சாசனம் நல்லதாக இருந்தாலும் அமல்படுத்துபவர்கள் நல்லவர்கள் இல்லையெனில் சட்டங்களும் மோசமாகிவிடும் - கமல்ஹாசன் டுவீட்
அரசியல் சாசனம் நல்லதாக இருந்தாலும் அமல்படுத்துபவர்கள் நல்லவர்கள் இல்லையெனில் சட்டங்களும் மோசமாகிவிடும் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
4. எனக்கும், கட்சியினருக்கும் இந்த தேர்தல் புதிய அனுபவம்: மண், மொழி, மக்களை காக்க என்றும் களத்தில் நிற்போம் கமல்ஹாசன் அறிக்கை
இந்த தேர்தல் தனக்கும், தன்னுடைய கட்சியினருக்கும் புதிய அனுபவம் என்றும், மண், மொழி, மக்களை காக்க என்றும் களத்தில் நிற்போம் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
5. கோவையில் வாக்கு எண்ணும் மையத்தை கமல்ஹாசன் பார்வையிட்டார்
கோவையில் வாக்கு எண்ணும் மையத்தை கமல்ஹாசன் பார்வையிட்டார்.