சினிமா செய்திகள்

மாற்றுத்திறனாளியாக சமந்தா + "||" + Samantha act as a disabled women

மாற்றுத்திறனாளியாக சமந்தா

மாற்றுத்திறனாளியாக சமந்தா
சமந்தா சூப்பர் டீலக்ஸ், யூ டர்ன், தெலுங்கில் ரங்கஸ்தலம் உள்ளிட்ட படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்றார்.

சமந்தா சூப்பர் டீலக்ஸ், யூ டர்ன், தெலுங்கில் ரங்கஸ்தலம் உள்ளிட்ட படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்றார். அடுத்து புதிய படமொன்றில் மாற்றுத்திறனாளியாக நடிக்க சம்மதம் தெரிவித்து உள்ளார். இந்த படத்தை கேம் ஓவர் படத்தை இயக்கி பிரபலமான அஸ்வின் சரவணன் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகிறது. இதில் வாய்பேசாத, காது கேட்காத பெண்ணாக சமந்தா நடிக்கிறார். இதற்காக பயிற்சிகள் எடுத்து வருகிறார். திகில் படமாக தயாராகிறது.

இதுகுறித்து சமந்தா கூறும்போது, “வாழ்க்கையில் புதிய புதிய சவால்களை ஏற்றால்தான் நமக்குள்ள திறமை வெளியே வரும். இது எல்லா துறைகளுக்கும் பொருந்தும். நடிகையாக எனக்கு இப்போது எந்த பயமும் இல்லை. எவ்வளவு கஷ்டமான கதாபாத்திரம் என்றாலும் செய்ய முடியும் என்று நம்புகிறேன். அடுத்து மாற்றுத்திறனாளி பெண்ணாக நடிக்கிறேன். ஏற்கனவே மகாநதி படத்தில் திக்குவாய் பெண்ணாக நடித்தேன். அந்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ததாக எனக்கு பெயர் வந்தது” என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. சின்ன கதாநாயகர்களை விட ‘‘கதாநாயகிகளுக்கு குறைவான சம்பளமே கொடுக்கிறார்கள்’’; சமந்தா ஆதங்கம்
‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சமந்தா, மற்ற கதாநாயகிகளுடன் ஒப்பிடும்போது, ஒளிவு மறைவு இல்லாதவர்.
2. நடிகைகளுக்கு குறைவான சம்பளம் சமந்தா வருத்தம்
நடிகர்-நடிகைகள் படத்துக்கு படம் சம்பளத்தை உயர்த்துகிறார்கள். ஆனாலும் கதாநாயகர்கள் சம்பளத்தை ஒப்பிடும்போது தங்களின் சம்பளம் பல மடங்கு குறைவாக இருப்பதாக கதாநாயகிகள் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள்.