சினிமா செய்திகள்

போதை பொருள் பயன்படுத்தும் நடிகர், நடிகைகள் பட்டியலை வெளியிடுவேன் நடிகை ஸ்ரீரெட்டி + "||" + Actress Sreedthy will release the list of actors and actresses

போதை பொருள் பயன்படுத்தும் நடிகர், நடிகைகள் பட்டியலை வெளியிடுவேன் நடிகை ஸ்ரீரெட்டி

போதை பொருள் பயன்படுத்தும் நடிகர், நடிகைகள் பட்டியலை வெளியிடுவேன் நடிகை ஸ்ரீரெட்டி
பெயர்களை வெளியிட்டு தமிழ், தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி.


பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர்களை வெளியிட்டு தமிழ், தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. ஐதராபாத்தில் அரை நிர்வாண போராட்டமும் நடத்தினார். அவரது வாழ்க்கை தமிழில் ரெட்டி டைரி என்ற பெயரில் படமாகி வருகிறது. இந்தி, கன்னட பட உலகில் போதை பொருட்கள் பயன்படுத்தும் குற்றச்சாட்டுகள் எழுந்து நடிகைகள் ரியா சக்கரவர்த்தி, ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைதாகி உள்ளனர். இந்த நிலையில் தெலுங்கு நடிகர்கள் போதை பொருள் பயன்படுத்துவதாக ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார்.


இதுகுறித்து முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்கள் வீடுகளில் நடக்கும் விருந்துகளில் போதை பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. அது இல்லாமல் பார்ட்டிகளே இல்லை. வாரிசு நடிகர்கள் பங்கேற்கும் நடன விருந்துகளிலும் போதை பொருள் புழக்கம் உள்ளது. ஒழுக்க கேடுகளும் நடக்கின்றன. சிலரை கைது செய்து விசாரித்தால் உண்மைகள் வெளியே வரும். தெலுங்கானா அரசு எனக்கு பாதுகாப்பு அளித்தால் போதை பொருள் பயன்படுத்தும் நடிகர், நடிகைகள் பட்டியலை வெளியிட தயாராக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார். இது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. துபாயில் வீடு வாங்கிய நடிகர் மோகன்லால்
பிரபல மலையாள நடிகர் மோகன்லால் துபாயில் சொந்தமாக வீடு வாங்கி இருக்கிறார். அந்த வீட்டில் கிரகப்பிரவேசம் செய்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.
2. எம்.ஜி.ஆர். நகரில் பயங்கரம் டி.வி. நடிகர் வெட்டிக்கொலை கள்ளக்காதல் தகராறில் நண்பர் வெறிச்செயல்
சென்னை எம்.ஜி.ஆர். நகரில் டி.வி. நடிகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கள்ளக்காதல் தகராறில் அவரை வெட்டிக்கொன்ற அவரது நண்பர் ஆட்டோவில் தப்பிச் சென்றுவிட்டார்.
3. போதைப்பொருள் வழக்கில் நடிகர் அர்ஜூன் ராம்பாலிடம் 7 மணி நேரம் விசாரணை
போதைப்பொருள் வழக்கில் இந்தி நடிகர் அர்ஜூன் ராம்பாலிடம் 7 மணி நேரம் விசாரணை நடந்தது. அப்போது தான் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்று மறுத்தார்.
4. பண்ட்வால் டவுனில் பயங்கரம் பிரபல கன்னட நடிகர் படுகொலை
பண்ட்வால் டவுனில் பிரபல கன்னட நடிகர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் பா.ஜனதா பிரமுகரை கொல்ல முயன்ற வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
5. மராத்தி நடிகர் அவினாஷ் கார்ஷிகர் மரணம்
மராத்தி நடிகர் அவினாஷ் கார்ஷிகர் மரணம்.