சினிமா செய்திகள்

1 கிலோ தங்க மோசடி செய்தேனா? ஷில்பா ஷெட்டி விளக்கம் + "||" + Did you cheat 1 kg of gold? Shilpa Shetty Description

1 கிலோ தங்க மோசடி செய்தேனா? ஷில்பா ஷெட்டி விளக்கம்

1 கிலோ தங்க மோசடி செய்தேனா? ஷில்பா ஷெட்டி விளக்கம்
1 கிலோ தங்க மோசடி செய்தேனா? ஷில்பா ஷெட்டி விளக்கம்
தமிழில் விஜய்யின் குஷி, பிரபுதேவாவுடன் மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஷில்பா ஷெட்டி. இந்தியில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். ஷில்பா ஷெட்டியும் அவரது கணவர் ராஜ்குந்த்ராவும் சத்யுக் தங்கம் என்ற நிறுவனத்தில் இயக்குனர்களாக பணியாற்றினர். இந்த நிறுவனம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தங்க அட்டைகள் வழங்கப்பட்டன. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியரான சச்சின் ஜோஷி என்பவர் ஒரு கிலோ தங்கம் வாங்கியதாகவும் ஆனால் ஷில்பா ஷெட்டி அதில் மோசடி செய்து விட்டதாகவும் போலீசில் புகார் அளித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சாட்டுக்கு ஷில்பா ஷெட்டி தற்போது பதில் அளித்து கூறியதாவது:-


“சச்சின் ஜோஷியின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை. அவருக்கு ஒரு கிலோ தங்கத்தை நாங்கள் கொடுத்து விட்டோம். அதற்கான சட்டப்பூர்வ கட்டணத்தை அவர் செலுத்தாமல் மோசடி செய்துள்ளார். அவர் எங்களுக்கு கட்ட வேண்டிய பணம் பற்றிய விவரங்களை கோர்ட்டில் தெரிவித்து உள்ளோம். அதோடு செக் மோசடி புகாரும் அவர் மீது அளித்துள்ளோம். இந்த பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய கோர்ட்டு ஒருவரை நியமித்து உள்ளது” என்றார்.