சினிமா செய்திகள்

அனுஷ்காவின் ‘சைலென்ஸ்’ ஓ.டி.டி.யில் 2-ந் தேதி ரிலீஸ் + "||" + Released on the 2nd on Anushka's 'Silence' OTD

அனுஷ்காவின் ‘சைலென்ஸ்’ ஓ.டி.டி.யில் 2-ந் தேதி ரிலீஸ்

அனுஷ்காவின் ‘சைலென்ஸ்’ ஓ.டி.டி.யில் 2-ந் தேதி ரிலீஸ்
அனுஷ்காவின் ‘சைலென்ஸ்’ ஓ.டி.டி.யில் 2-ந் தேதி ரிலீஸ்
கொரோனா பரவலால் புதிய படங்களை நேரடியாக இணையதளமான ஓ.டி.டி.யில் ரிலீஸ் செய்ய தொடங்கி உள்ளனர். பொன்மகள் வந்தாள், பெண்குயின், டேனி மற்றும் லாக்கப் உள்ளிட்ட பல படங்கள் ஓ.டி.டி.யில் வந்தன. விஜய்சேதுபதி நடித்துள்ள க.பெ.ரணசிங்கம் அடுத்த மாதம் 2-ந்தேதியும், சூர்யா நடித்துள்ள சூரரை போற்று படம் அடுத்த மாதம் 30-ந்தேதியும் ஓ.டி.டி.யில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர்.


இந்த நிலையில் அனுஷ்கா நடிப்பில் தமிழ், மலையாள மொழிகளில் சைலென்ஸ் என்ற பெயரிலும் தெலுங்கில் நிபந்தம் என்ற பெயரிலும் தயாராகி உள்ள படமும் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்று நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பெரிய நடிகையான அனுஷ்கா படமும் ஓ.டி.டி. தளத்துக்கு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தில் மாதவன், அஞ்சலி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹேமந்த் மதுகர் இயக்கி உள்ளார். திகில் படமாக தயாராகி உள்ளது. அனுஷ்கா வாய்பேசாத, காது கேளாத பெண்ணாக நடித்து இருக்கிறார். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடந்துள்ளது.