சினிமா செய்திகள்

"எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்" - எஸ்.பி.பி. சரண் தகவல் + "||" + "SB Balasubramaniam's health improves" - SPB Charan information

"எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்" - எஸ்.பி.பி. சரண் தகவல்

"எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்" - எஸ்.பி.பி. சரண் தகவல்
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைந்து குணமடைந்து வருவதாக என அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.
சென்னை,

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த தகவலை அவரே சமூக வலைளத்திலும் வெளியிட்டார்.


இதனை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது. இதனையடுத்து வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் எஸ்பிபிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய பல்வேறு திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கூட்டு பிரார்த்தனைகள் மேற்கொண்டனர். அவருடைய மகன் எஸ்.பி.பி. சரண் அவ்வப்போது தந்தையின் உடல்நிலை குறித்த வீடியோ வெளியிட்டு வருகிறார்.

அதன்படி, இன்று எஸ்.பி.பி. சரண் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

“எனது அப்பா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைந்து குணமடைகிறார். அவர் நேற்றில் இருந்து உணவு எடுத்துக் கொள்கிறார். மருத்துவர்கள் உதவியுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் எழுந்து உட்காருகிறார். அவருக்கு தொடர்ந்து மருத்துவக்குழு தீவிர சிசிச்சை அளித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. எஸ்பிபி மருத்துவக் கட்டண விவகாரத்தில் நடந்தது என்ன; எஸ்பிபி சரண் விளக்கம்
எஸ்பிபி மருத்துவக் கட்டண விவகாரத்தில் நடந்தது என்ன என்பது குறித்து அவரது மகன் எஸ்பிபி சரண் விளக்கம் அளித்து உள்ளார்.
2. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மருத்துவ செலவு தொடர்பான செய்தி தவறான செய்தி - மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மருத்துவ செலவு தொடர்பான செய்தி தவறான செய்தி என மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
3. மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குறித்து நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியவை...!
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குறித்து நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியவை...! தனது அரை நூற்றாண்டுகால திரை வாழ்க்கையில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நிகழ்த்திய சாதனைகள் குறித்து நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியவை...!
4. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு : கமல் - ரஜினி - பிரபலங்கள் இரங்கல்
எஸ்.பி.பி மறைவு - கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான், ஆர்யா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
5. பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை மீண்டும் கவலைக்கிடம்
பின்னணி பாடகர் பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலையில் பின்னடவை ஏற்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளது.