சினிமா செய்திகள்

போண்டாமணியின் 35 வருட நகைச்சுவை அனுபவங்கள் + "||" + Pontamani's 35 years of comedy experience

போண்டாமணியின் 35 வருட நகைச்சுவை அனுபவங்கள்

போண்டாமணியின் 35 வருட நகைச்சுவை அனுபவங்கள்
கவுண்டமணி, செந்தில் படங்களில் அவர்களோடு சேர்ந்து ‘காமெடி’ செய்தவர், போண்டாமணி.
கவுண்டமணி, செந்தில் படங்களில் அவர்களோடு சேர்ந்து ‘காமெடி’ செய்தவர், போண்டாமணி. விவேக், வடிவேல், சந்தானம், சூரி, யோகி பாபு என்று அத்தனை நகைச்சுவை நடிகர்களுடனும் சேர்ந்து தமாஷ் செய்த இவர், இதுவரை 230 படங்களில் நடித்து இருக்கிறார். எல்லா நகைச்சுவை நடிகர்களையும் போல் இவரும் ஒரு படத்தில் கதாநாயகன் ஆகியிருக்கிறார். அந்த படத்தின் பெயர், ‘சின்ன பண்ணை பெரிய பண்ணை.’ இவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர், சர்மிலி.


போண்டாமணி சினிமாவுக்கு வந்து 35 வருடங்கள் ஆகிவிட்டதாம். அந்த நீண்டகால அனுபவம் பற்றி இவர் கூறுகிறார்:

“என் சொந்த நாடு, இலங்கை. எடப்பாடி அகதிகள் முகாமில் இருந்த என்னை நடிகர் ஆக்கியவர், டைரக்டர் கே.பாக்யராஜ். படம்: ‘பவுனு பவுனு’தான். இப்போது கதைநாயகனாக நடித்துள்ள ‘சின்ன பண்ணை பெரிய பண்ணை’ படத்தை இயக்கியிருப்பவர், பகவதி பாலா. தயாரித்து இருப்பவர், தனசேகரன். என் அனுபவத்தில், வீட்டு கதவை தட்டி சம்பளம் கொடுத்த ஒரே தயாரிப்பாளர், இவர்தான்.

எனக்கு பிடித்த நடிகைகள் ரோஜா, கோவை சரளா. வடிவேலுவும், சிங்கமுத்துவும் சேர்ந்து எனக்கு திருமணம் செய்து வைத்தார்கள். மனைவி பெயர், மாதவி. எங்களுக்கு சாய்ராம் என்ற மகனும், சாய்குமாரி என்ற மகளும் இருக்கிறார்கள். எனக்கு வயது 56 ஆகிவிட்டது. ‘சின்ன பண்ணை பெரிய பண்ணை’ படம், போதைக்கு அடிமையான ஒரு மனிதனை பற்றிய கதை. இந்த படத்துக்கு நிச்சயமாக விருது கிடைக்கும்.”