சினிமா செய்திகள்

மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ + "||" + ‘Devil-2’ directed by Mishkin

மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’

மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’
மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், ‘பிசாசு.’
ஒரு மலை கிராமத்தில் நடக்கும் பயங்கரமான பேய் கதை.

மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், ‘பிசாசு.’ அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகம், ‘பிசாசு-2’ என்ற பெயரில் தயாராகிறது. இந்த படத்தையும் மிஷ்கினே இயக்குகிறார். முருகானந்தம் தயாரிக்கிறார்.


கதை நாயகியாக ஆண்ட்ரியா நடிக்கிறார். ‘சைகோ’ படத்தில் வில்லனாக நடித்த ராஜ்குமார் பிச்சுமணி, முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தை பற்றி டைரக்டர் மிஷ்கின் கூறியதாவது:-

“பிசாசு-2, முழுக்க முழுக்க பேய் கதையாக தயாராகிறது. இது, சிரிப்பு பேய் அல்ல. ஆக்ரோசமான பேய். முதல் பாகம் தொடர்பான சில காட்சிகள் அமைந்திருக்கும். முதல் பாகத்தை விட, நூறு மடங்கு அதிகமாக திகில் காட்சிகள் இடம்பெறும். படத்தில், மிக பயங்கரமான பயமுறுத்தல்களும், மிரட்டல்களும் இருக்கும். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஒரு மலை கிராமத்தில் கதை சம்பவங்கள் நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. முழு படப்பிடிப்பும் நீலகிரி மாவட்டம் மசனக்குடியில் நடைபெறும்.”