சினிமா செய்திகள்

கால்வாயை சீரமைத்த கார்த்தி ரசிகர்கள் + "||" + Karthi fans aligning the canal

கால்வாயை சீரமைத்த கார்த்தி ரசிகர்கள்

கால்வாயை சீரமைத்த கார்த்தி ரசிகர்கள்
விவசாயிகளுக்கு உதவுவதற்காக நடிகர் கார்த்தி, ‘உழவன் பவுண்டேசன்’ என்ற அமைப்பை தொடங்கி இருக்கிறார்.
விவசாயிகளுக்கு உதவுவதற்காக நடிகர் கார்த்தி, ‘உழவன் பவுண்டேசன்’ என்ற அமைப்பை தொடங்கி இருக்கிறார். இந்த அமைப்பை சேர்ந்தவர்கள், திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்தில், 13 கிலோ மீட்டர் நீளமுள்ள சூறாவளி கால்வாயை ரூ.4 லட்சம் செலவில் சீரமைத்துள்ளனர். இதற்காக, ‘உழவன் பவுண்டேசன்’ அமைப்பை சேர்ந்தவர்கள் 21 நாட்கள், சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இந்த சீரமைப்பின் மூலம் அந்த சுற்றுவட்டாரத்தில் உள்ள 8 ஏரிகள் பாசன வசதி பெறுகின்றன. 10 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களும், 10 கிராம மக்களும் பயன்பெறுவார்கள்.