சினிமா செய்திகள்

வேலை கேட்டு சென்றால் எதற்கும் தயார் என பொருள் இல்லை; நடிகை பாயல் கோஷ் ஆவேசம் + "||" + Asking for work does not mean being ready for anything; Actress Payal Ghosh is obsessed

வேலை கேட்டு சென்றால் எதற்கும் தயார் என பொருள் இல்லை; நடிகை பாயல் கோஷ் ஆவேசம்

வேலை கேட்டு சென்றால் எதற்கும் தயார் என பொருள் இல்லை; நடிகை பாயல் கோஷ் ஆவேசம்
வேலை கேட்டு சென்றால் அவர்கள் எதற்கும் தயார் என்று பொருள் இல்லை என தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் பற்றி நடிகை பாயல் கோஷ் பேட்டியில் ஆவேசமுடன் கூறியுள்ளார்.
புதுடெல்லி,

தமிழில் தேரோடும் வீதியிலே என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் பாயல் கோஷ்.  பின்னர் தெலுங்கில் இவர் நடித்த ஒசரவல்லி என்ற படம் ஹிட்டாக அதன்பின்னர் தெலுங்கு படங்களில் ஆர்வம் காட்டினார்.  இவர் இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் பாயல் கோஷ், இந்தி திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப் தன்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என குற்றச்சாட்டு கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.  இது இந்தி திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுபற்றி கோஷ் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, இயக்குனர் அனுராக் சகித்து கொள்ள முடியாத வகையில் என்னிடம் நடந்து கொண்டார்.  அவரது செயல் எனக்கு மோசமான உணர்வை ஏற்படுத்தியது.  என்ன நடந்ததோ அது நடந்திருக்க கூடாது என்று கூறினார்.

உங்களிடம் வேலை வேண்டும் என யாரேனும் அணுகினால், அதற்கு அவர்கள் எதற்கும் தயார் என்று பொருள் இல்லை என ஆவேசமுடன் கோஷ் கூறினார்.

அவரிடம், இதுபற்றி தற்பொழுது பேச வேண்டும் என ஏன் முடிவு செய்தீர்கள் என நிருபர்கள் கேட்டதற்கு, முன்பே கூற நான் முயன்றேன்.  ஆனால், என்னுடைய குடும்பமும், நண்பர்களும் என்னை தடுத்து விட்டனர்.  என்னுடைய குடும்பம் பாரம்பரியமிக்கது.

டுவிட்டரில் இதுபற்றி முன்பே பதிவிட்டேன்.  ஆனால், மேலிட அழுத்தத்தினால் அதனை அழிக்க கட்டாயப்படுத்தப்பட்டேன் என கூறியுள்ளார்.