சினிமா செய்திகள்

சூர்யாவின் புதிய படங்கள் + "||" + New movie of Surya

சூர்யாவின் புதிய படங்கள்

சூர்யாவின் புதிய படங்கள்
சூர்யாவின் அருவா படத்தை கைவிட்டு விட்டனர் என்றும் பேசப்படுகிறது.
சூர்யா நடித்து கடந்த வருடம் என்.ஜி.கே., காப்பான் ஆகிய படங்கள் வந்தன. சூரரை போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி அடுத்த மாதம் (அக்டோபர்) 30-ந் தேதி ஓ.டி.டி தளத்தில் ரிலீசாகிறது. அடுத்து சில புதிய படங்களில் நடிக்க சூர்யா தயாராகி வருகிறார். அதில் ஒன்று வாடிவாசல். இந்த படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். ஆடுகளம் படத்தில் சேவல் சண்டையை மையக் கதையாக வைத்து இருந்த அவர் வாடிவாசலில் ஜல்லிக்கட்டு மோதலை கையில் எடுத்துள்ளார்.


கிராமத்து கதையம்சத்தில் தயாராகும் இந்த படத்தில் சூர்யா காளையை அடக்கும் காட்சிகளும், அதன் பின்னால் இருக்கும் அரசியலும் காட்சிப்படுத்தப்படுகிறது. கூட்டத்தில் ஒருத்தன் படத்தை எடுத்து பிரபலமான ஞானவேல் இயக்கும் படத்திலும் சூர்யா நடிக்க பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கும் படத்திலும் நடிக்கிறார். இந்த படமும் கிராமத்து கதையம்சம் கொண்டது. இந்த 3 படங்களிலும் அடுத்தடுத்து நடிக்க உள்ளார். ஏற்கனவே ஹரி இயக்கும் அருவா படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

சூரரை போற்று படத்தை ஓ.டி.டி தளத்துக்கு கொடுத்ததை ஹரி விமர்சித்து இருந்தார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்றும், அருவா படத்தை கைவிட்டு விட்டனர் என்றும் பேசப்படுகிறது.