சினிமா செய்திகள்

டேனியல் கிரெய்க் விலகல் புதிய ஜேம்ஸ் பாண்ட் நடிகர் டாம் ஹார்டி? + "||" + Daniel Craig deviates from the new James Bond actor Tom Hardy?

டேனியல் கிரெய்க் விலகல் புதிய ஜேம்ஸ் பாண்ட் நடிகர் டாம் ஹார்டி?

டேனியல் கிரெய்க் விலகல் புதிய ஜேம்ஸ் பாண்ட் நடிகர் டாம் ஹார்டி?
டேனியல் கிரெய்க் விலகல் புதிய ஜேம்ஸ் பாண்ட் நடிகர் டாம் ஹார்டி?
ஹாலிவுட் பட உலகில் 1960களில் தொடங்கிய ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதுவரை 24 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வந்துள்ளன. தற்போது 25-வது ஜேம்ஸ் பாண்ட் படமாக தயாராகும் நோ டைம் டூ டை படத்தில் ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் இங்கிலாந்தை சேர்ந்த டேனியல் கிரெய்க் நடித்து வருகிறார். இதுவரை நான்கு தடவை இந்த வேடத்தை ஏற்று நடித்துள்ள அவருக்கு இது ஐந்தாவது படம். இது தனது கடைசி படம் என்றும், இனிமேல் ஜேம்ஸ் பாண்டாக நடிக்க மாட்டேன் என்றும் டேனியல் கிரெய்க் அறிவித்து உள்ளார்.


எனவே அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகர் யார் என்று எதிர்பார்ப்பு நிலவியது. அமெரிக்க கருப்பின நடிகர் இத்லிஸ் எல்பா நடிக்க வாய்ப்புள்ளது என்று பேசப்பட்டது. ஹாலிவுட் நடிகை லஷானா லின்ச் பெயரும் அடிபட்டது. இவர் கேப்டன் மார்வல் படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்தவர். தற்போது நடிகர் டாம் ஹார்டிதான் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் நடிகர் என்பது உறுதி செய்யப்பட்டு விட்டதாக ஹாலிவுட் பட உலகில் தகவல் பரவி உள்ளது.

43 வயதான டாம் ஹார்டி ஏற்கனவே இன்செப்ஷன், மேட் மேக்ஸ் பியூரி ரோட், ரெவனண்ட், வெனம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார்.