சினிமா செய்திகள்

வெப் தொடரில் நடிக்க ஹிருத்திக் ரோஷனுக்கு ரூ.80 கோடி சம்பளம் + "||" + Hrithik Roshan gets Rs 80 crore salary

வெப் தொடரில் நடிக்க ஹிருத்திக் ரோஷனுக்கு ரூ.80 கோடி சம்பளம்

வெப் தொடரில் நடிக்க ஹிருத்திக் ரோஷனுக்கு ரூ.80 கோடி சம்பளம்
இந்தி நடிகர்கள் திரைப்படங்களிலும், விளம்பரங்களிலும் நடித்து கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்கள்.
இந்தி நடிகர்கள் திரைப்படங்களிலும், விளம்பரங்களிலும் நடித்து கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்கள். முன்னணி நடிகர்களுக்கு ஒரு படத்தில் சம்பளம், லாபத்தில் பங்கு தொகை என்ற ரீதியில் ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் வருகிறது. தற்போது இந்தி நடிகர், நடிகைகள் பலர் வெப் தொடர்களில் நடிக்க வந்துள்ளனர். சயீப் அலிகான், அபிஷேக் பச்சன், மாதவன், நவாசுதின் சித்திக், ராதிகா ஆப்தே, கியாரா அத்வானி ஆகியோர் வெப் தொடர்களில் நடிக்கிறார்கள்.


இந்த வரிசையில் ஹிருத்திக் ரோஷனையும் புதிய வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த தொடரில் நடிக்க ஹிருத்திக் ரோஷன் ரூ.80 கோடி சம்பளம் கேட்டு உள்ளதாக தகவல் பரவி உள்ளது.

சேக்ரட் கேம்ஸ் தொடரில் நடித்த சயீப் அலிகான் சம்பளத்தை விட இது பல மடங்கு அதிகம் என்கின்றனர்.

வெப் தொடருக்கு இவ்வளவு பெரிய தொகையை ஹிருத்திக் ரோஷன் சம்பளமாக கேட்டு இருப்பது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் அக்‌ஷய்குமாரும் புதிய வெப் தொடரில் நடிக்க தயாராகிறார். அவரும் ரூ.80 கோடி சம்பளம் கேட்கிறாராம்.