சினிமா செய்திகள்

படப்பிடிப்பில் பங்கேற்கும் மோகன்லால், மீனாவுக்கு கொரோனா பரிசோதனை + "||" + Corona experiment for Mohanlal, Meena

படப்பிடிப்பில் பங்கேற்கும் மோகன்லால், மீனாவுக்கு கொரோனா பரிசோதனை

படப்பிடிப்பில் பங்கேற்கும் மோகன்லால், மீனாவுக்கு கொரோனா பரிசோதனை
கொரோனா பரவல் இன்னும் அடங்கவில்லை.
கொரோனா பரவல் இன்னும் அடங்கவில்லை. அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களும் இதில் சிக்குகிறார்கள். தற்போது மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை தளர்த்தி சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கி உள்ளன. இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கி உள்ளன.


சமூக விலகல், கை கழுவுதல் நடிகர், நடிகைகள் தவிர மற்றவர்கள் முககவசம் அணிதல் உள்ளிட்ட அரசு விதிமுறைகளை பின்பற்றி படப்பிடிப்புகளை நடத்துகிறார்கள். ஆனாலும் படப்பிடிப்புகளிலும் கொரோனா தொற்று பரவுகிறது. சமீபத்தில் மும்பையில் நடந்த 2 இந்தி தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்புகளில் பங்கேற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மோகன்லால், மீனா ஆகியோர் மலையாளத்தில் நடிக்கும் திரிஷ்யம் 2-ம் பாகம் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் இன்று தொடங்குகிறது.

மோகன்லால், மீனா உள்பட படப்பிடிப்பில் பங்கேற்கும் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மோகன்லால் நடித்த சரித்திர படம் மீண்டும் தாமதம்
கொரோனாவால் நிறைய படங்கள் திரைக்கு வராமல் முடங்கி உள்ளன. அதையும் மீறி வரும் படங்களுக்கு எதிர்பார்த்த வசூல் இல்லை. முடங்கிய படங்கள் பட்டியலில் மோகன்லாலின் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கமும் இடம்பெற்றுள்ளது.
2. மோகன்லால் மகன் பிரணவுடன் கல்யாணி காதலா?
மோகன்லால் மகன் பிரணவ்வும், கல்யாணியும் காதலிப்பதாக மலையாள பட உலகில் கிசுகிசுக்கள் பரவி வருகின்றனர்.