சினிமா செய்திகள்

வில்லியாக நடிக்கும் தமன்னா + "||" + Tamanna playing the villain

வில்லியாக நடிக்கும் தமன்னா

வில்லியாக நடிக்கும் தமன்னா
இந்தியில் அயுஷ்மன் குர்ரானா, ராதிகா ஆப்தே, தபு ஆகியோர் நடித்து வெற்றி பெற்ற படம் அந்தாதுன்.
இந்தியில் அயுஷ்மன் குர்ரானா, ராதிகா ஆப்தே, தபு ஆகியோர் நடித்து வெற்றி பெற்ற படம் அந்தாதுன். இந்த படத்துக்கு சிறந்த இந்தி படம், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகர் ஆகிய 3 தேசிய விருதுகள் கிடைத்தன. இதன் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் வாங்கி இருக்கிறார். மோகன்ராஜா இயக்க பிரசாந்த் நடிக்க உள்ளார். இதுபோல் அந்தாதுன் படத்தை தெலுங்கிலும் ரீமேக் செய்கின்றனர். இதில் நிதின் கதாநாயகனாகவும் ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் நபா நடேஷும் நடிக்கின்றனர். இந்தியில் தபு நடித்திருந்த வில்லி வேடத்தில் நடிக்க நயன்தாராவை அணுகினர். அவர் பல கோடிகள் சம்பளம் கேட்டதால் வேறு நடிகை தேடினர். நதியா, ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் பரிசீலனையில் இருந்தனர். இறுதியாக தமன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். முதல் தடவையாக இந்த படத்தில் தமன்னா வில்லி வேடம் ஏற்கிறார். மெர்லபகா காந்தி இயக்குகிறார். இந்த படத்தில் நடிப்பது குறித்து தமன்னா கூறும்போது, “அந்தாதுன் படத்தை பார்த்தபோதே எனக்கு பிடித்தது. எனது கதாபாத்திரம் வில்லத்தனமாக இருக்கும். என்னை படத்தில் புதிதாக பார்ப்பீர்கள் என்றார். இதன் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்குகிறது.