சினிமா செய்திகள்

சுறுசுறுப்பின் ரகசியம் ரஜினி பற்றி நிவேதா சொல்லும் விஷயங்கள் + "||" + The secret of agility is what Niveda says about Rajini

சுறுசுறுப்பின் ரகசியம் ரஜினி பற்றி நிவேதா சொல்லும் விஷயங்கள்

சுறுசுறுப்பின் ரகசியம் ரஜினி பற்றி நிவேதா சொல்லும் விஷயங்கள்
கமல்ஹாசனுடன் பாபநாசம், விஜய்யுடன் ஜில்லா படங்களில் நடித்துள்ள நிவேதா தாமஸ் தர்பார் படத்தில் ரஜினியின் மகளாக வந்தார்.
கமல்ஹாசனுடன் பாபநாசம், விஜய்யுடன் ஜில்லா படங்களில் நடித்துள்ள நிவேதா தாமஸ் தர்பார் படத்தில் ரஜினியின் மகளாக வந்தார். ரஜினி பற்றி அவர் கூறியதாவது:-

“ரஜினிகாந்துடன் ஒரு காட்சியில் நடித்தால் போதும் நடிகர் அங்கீகாரம் கிடைத்து விடும் என்று ஆசைப்படுபவர்கள் பலர் உள்ளனர். எனது அதிர்ஷ்டம் அவருக்கு மகளாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ரஜினி வயதில் மட்டும்தான் பெரியவர். ஆனால் படப்பிடிப்பு அரங்கில் சிறிய வயதுக்காரர் மாதிரி துள்ளி குதித்துக்கொண்டு இருப்பார். என்னை மாதிரி இளைய வயதுக்காரர்கள் சும்மா உட்கார்ந்து இருப்போம். ஆனால் அவர் அங்கும் இங்கும் போய் வந்து கொண்டு சுறுசுறுப்பாக இருப்பார். என்னை முதல் தடவை பார்த்ததும் அட இந்த பெண்ணா நல்லா நடிக்குது இவரோட படங்களையெல்லாம் நிறைய பார்த்து இருக்கிறேன் என்று இயக்குனரிடம் அவர் சொன்னபோது எனக்கு பெருமையாக இருந்தது. படப்பிடிப்பு அரங்கில் சுற்றி என்ன நடக்கிறது என்பதையெல்லாம் கவனிப்பார். அவருடன் உட்கார்ந்து இருந்தால் நமக்கு சத்தான உணவு, ஆன்மிக விஷயங்கள் பற்றி தெளிவாக சொல்வார். நாம் எவ்வளவு படித்தாலும் எவ்வளவு பெரிய ஆன்மிகவாதிகள் பிரசங்கங்களை கேட்டாலும் அவ்வளவு தெளிவு வராது. இந்த வயதில் கூட அவர் தினமும் இரண்டு வேளை உடற்பயிற்சி செய்கிறார். உணவு கட்டுப்பாட்டை கடுமையாக கடைபிடிக்கிறார். இதுதான் அவரது இளமை மற்றும் சுறுசுறுப்பின் ரகசியம். அவரிடம் இந்த மாதிரி நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.”


இவ்வாறு நிவேதா தாமஸ் கூறினார்.