சினிமா செய்திகள்

கொரோனா நஷ்டத்தை ஈடுகட்டிய அக்‌ஷய்குமார் + "||" + Akshay Kumar compensates for Corona's loss

கொரோனா நஷ்டத்தை ஈடுகட்டிய அக்‌ஷய்குமார்

கொரோனா நஷ்டத்தை ஈடுகட்டிய அக்‌ஷய்குமார்
அக்‌ஷய்குமார் கொரோனா நிவாரண நிதியாக பல கோடிகள் வழங்கி உள்ளார்.
அக்‌ஷய்குமார் கொரோனா நிவாரண நிதியாக பல கோடிகள் வழங்கி உள்ளார். தற்போது அவர் நடித்து வரும் பெல்பாட்டம் இந்தி படத்தின் படப்பிடிப்பு ஸ்காட்லாந்தில் தொடங்கி உள்ளது. படத்தில் வாணிகபூர், லாரா தத்தா, கியூமா குரோஷி ஆகியோரும் நடிக்கின்றனர். ரஞ்சித் எம். திவாரி இயக்குகிறார். இரண்டு பட நிறுவனங்கள் தயாரிக்கின்றன. படப்பிடிப்பாக ஸ்காட்லாந்து சென்ற படக்குழுவினரை 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைத்து அதன்பிறகே படப்பிடிப்பை தொடங்க அந்த நாட்டில் அனுமதி வழங்கினர். இதனால் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது. இதை அறிந்த அக்‌ஷய்குமார் நஷ்டத்தை ஈடுகட்ட தினமும் இரண்டு ஷிப்டுகள் நடித்து தர முன்வந்துள்ளார். இதன்மூலம் திட்டமிட்ட தேதியில் படப்பிடிப்பை முடித்து நஷ்டத்தை ஈடுகட்டி விடலாம் என்று தெரிவித்துள்ளார். இது தயாரிப்பாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. படக்குழுவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து படப்பிடிப்பை வேகமாக நடத்தி வருகிறார்கள். அக்‌ஷய்குமாரை தயாரிப்பாளர்கள் பாராட்டி உள்ளனர்.