சினிமா செய்திகள்

அஜித்துக்கு தயாரான புதிய அதிரடி கதை ஜி.வி.பிரகாஷ் தகவல் + "||" + GV Prakash's new action story ready for Ajith

அஜித்துக்கு தயாரான புதிய அதிரடி கதை ஜி.வி.பிரகாஷ் தகவல்

அஜித்துக்கு தயாரான புதிய அதிரடி கதை ஜி.வி.பிரகாஷ் தகவல்
அஜித்குமார் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.
அஜித்குமார் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்து விட்டு அவர் இறுதி சுற்று, சூரரை போற்று படங்களை இயக்கி உள்ள சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என்றும் தகவல்கள் பரவின. சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கலந்துரையாடலில் அஜித் மற்றும் சுதா கொங்கரா படம் குறித்த கேள்விக்கு ஜி.வி.பிரகாஷ் பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “அஜித்குமாருக்காக சுதா கொங்கரா சொன்ன கதை உண்மையில் செமயான கதை. அந்த படம் உருவானால் பிரமாதமாக இருக்கும். சூரரை போற்று படத்தில் எப்படி ஒரு எல்லையை தொடுவாரோ அதேமாதிரி செமயாக இந்த கதையை உருவாக்கி உள்ளார். இது பெரிய அதிரடி படமாக இருக்கும். சுதா கொங்கரா அந்த கதையை என்னிடம் கூறினார். ரொம்ப அற்புதமான கதை. அது நடந்தால் அற்புதமாக இருக்கும். எனது முதல் படமான வெயில் முடிந்ததும் அஜித்தின் கிரீடம் படத்துக்கு ஒப்பந்தமானேன். அவ்வளவு பெரிய நடிகர் ஒரு படம் முடித்த என்னை மாதிரியான இசையமைப்பாளருக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்த படத்தின் பாடல்கள் இப்போதுவரை கொண்டாடப்பட்டு வருகிறது. சூரரை போற்று படம் இந்திய சினிமாவில் வித்தியாசமாக இருக்கும்.” என்றார்.