சினிமா செய்திகள்

போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நிறுவனத்தில் எனக்கு எந்த பங்கும் இல்லை நடிகர் சல்மான் கான் மறுப்பு + "||" + Report claims Salman Khan's firm owns majority stake in KWAN; actor's legal team denies

போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நிறுவனத்தில் எனக்கு எந்த பங்கும் இல்லை நடிகர் சல்மான் கான் மறுப்பு

போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நிறுவனத்தில் எனக்கு எந்த பங்கும் இல்லை நடிகர் சல்மான் கான் மறுப்பு
நடிகர் சல்மான்கானுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ க்வான் நிறுவனத்தில் பங்கு இல்லை என அவரது சட்டக்குழு மறுத்து உள்ளது.
மும்பை: 

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் (34) ஜூன் 14 அன்று மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இது குறித்த விசாரணையில் பாலிவுட் பிரபலங்கள் போதைபொருள் பயன்படுத்துவது கண்டறியபட்டது 

போதைப்பொருள்  தொடர்பான விசாரணை தொடர்பாக இதுவரை ராஜ்புத்தின் காதலியும் நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது சகோதரர்  சோயிக் சக்ரபோர்த்தி உள்பட 12 க்கும் மேற்பட்டவர்களை போதைப்பொருள் தடுப்பு அமைப்பு கைது செய்துள்ளது.

போதைப்பொருள் தடுப்பு அமைப்பு பல பிரபல பாலிவுட் பிரபலங்களை விசாரணைக்கும் அழைத்தது. அதில் முக்கியமானவர் திறண் மேலாண்மை நிறுவனமான க்வானில் தலைமை நிர்வாக அதிகாரியும் ஒருவர் ஆவார்.

திறன் மேலாண்மை நிறுவனமான க்வானில் நடிகர் சல்மான் கானின் நிறுவனம் பெரும்பான்மை பங்கைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.

சல்மானைத் தவிர, பல பாலிவுட் பிரபலங்கள் திறன் மேலாண்மை நிறுவனத்தில் பங்குகளை வைத்திருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சல்மான்கானின்  சட்டக் குழு இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்து உள்ளது. அனைத்து ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க ஒரு விளக்கத்தை வெளியிட்டு உள்ளது. அந்த குழு வெளியிட்டு உள்ள அறிக்கையில், நடிகருக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ க்வான் நிறுவனத்தில் பங்கு இல்லை என்று கூறியுள்ளது.

ஒரு முன்னணி இந்திய நடிகரான எங்கள் வாடிக்கையாளர் சல்மான் கான், திறன் மேலாண்மை நிறுவனமான க்வான் டேலண்ட் மேனேஜ்மென்ட் ஏஜென்சி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பெரும்பான்மை பங்குகளை வைத்திருப்பதாக ஊடகங்களின் சில பிரிவுகள் பொய்யாக அறிக்கை வெளியிடுகின்றன. சல்மான் கானுக்கு க்வான் அல்லது அதன் குழு நிறுவனங்களில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தப் பங்கும் இல்லை. எங்கள் வாடிக்கையாளர் குறித்து தவறான அறிக்கைகளை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்று கூறி உள்ளது.

தயாரிப்பாளரான நிகில் திவேதியும் கானுக்கும் பாலிவுட் திறமை மேலாண்மை நிறுவனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்து உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. திரையரங்குகளை திறக்க நடவடிக்கை: உரிமையாளர்கள் சங்கம் முதல்வரை சந்தித்து கோரிக்கை
தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க நடவடிக்கை எடுக்க கோரி திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கம் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர்.
2. 30% சம்பளத்தை விட்டுக் கொடுத்து, சினிமா உலகம் மீண்டெழ உதவ நடிகர்களுக்கு பாரதிராஜா வேண்டுகோள்
சம்பளக் குறைப்பு தொடர்பாக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. மலையாள நடிகர் சங்கத்திலிருந்து நடிகை பார்வதி திடீர் விலகல்.
மலையாள நடிகர் சங்கத்திலிருந்து நடிகை பார்வதி விலகி உள்ளார். சங்கத்தின் மீது கடும் விமர்சனம் வைத்துள்ளார்.
4. கொரோனா வார்டில் செவிலியர் பணிக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட நடிகை, மருத்துவமனையில் அனுமதி..
ஷிகா மல்ஹோத்ரா தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அவரது ஆக்சிஜன் அளவு குறைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
5. படப்பிடிப்பின் போது பலத்த காயம் பிரபல ஹீரோ அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
படப்பிடிப்பின் போது பலத்த காயம் பிரபல நடிகர் டொவினோ தாமஸ் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளார்.