சினிமா செய்திகள்

தேனிலவில் அடித்து சித்ரவதை: கணவர் மீது பூனம் பாண்டே போலீசில் புகார் + "||" + Honeymoon torture: Poonam Pandey complains to police about her husband

தேனிலவில் அடித்து சித்ரவதை: கணவர் மீது பூனம் பாண்டே போலீசில் புகார்

தேனிலவில் அடித்து சித்ரவதை: கணவர் மீது பூனம் பாண்டே போலீசில் புகார்
தேனிலவில் அடித்து சித்ரவதை காரணமாக கணவர் மீது பூனம் பாண்டே போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்தி பட உலகின் பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே. இவரும் சாம் பாம்பே என்பவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஒன்றாகவும் சேர்ந்து வாழ்ந்தார்கள். கடந்த 10-ந் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமண புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். பின்னர் 16-ந் தேதி கோவாவுக்கு தேனிலவு சென்றனர். அங்கு இருவருக்கும் திடீர் மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து கோவா போலீசில் கணவர் மீது பூனம் பாண்டே புகார் அளித்தார். மனுவில் கணவர் சாம் பாம்பே தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அடித்து துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டு உள்ளார். இதையடுத்து சாம் பாம்பேவை போலீசார் கைது செய்தனர். பூனம் பாண்டேவுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்தன. திருமணமாகி 10 நாட்களிலேயே தேனிலவு சென்ற இடத்தில் கணவருடன் தகராறு ஏற்பட்டு பூனம் பாண்டே போலீசுக்கு சென்றது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மோதலையடுத்து பூனம் பாண்டேவுடன் எடுத்த நிச்சயதார்த்த மற்றும் திருமண புகைப்படங்கள் அனைத்தையும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து சாம் பாம்பே நீக்கினார். போலீசார் விசாரணை நடத்தி சாம் பாம்பேவை கைது செய்தனர்.