சினிமா செய்திகள்

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை மீண்டும் கவலைக்கிடம் + "||" + Singer SPB's health deteriorates, hospital says he's ‘extremely critical’

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை மீண்டும் கவலைக்கிடம்

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின்  உடல் நிலை மீண்டும் கவலைக்கிடம்
பின்னணி பாடகர் பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலையில் பின்னடவை ஏற்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளது.
சென்னை

பிரபல பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

ஆரம்பத்தில் லேசான தொற்றுடன் சென்ற அவருக்கு திடீரென, பாதிப்பு அதிகமானது. இதனால் ஐசியூவுக்கு மாற்றப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 

ஒரு கட்டத்தில் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் பெரும் கலக்கமடைந்தனர். எஸ்பிபி விரைவில் குணமடைய வேண்டி தமிழகம் முழுவதும் கூட்டுப் பிரார்த்தனைகள் நடைபெற்றது. 

இதனை தொடர்ந்து எஸ்பிபியின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டது. எஸ்பி பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை குறித்து அவரது மகனும் பாடகருமான எஸ்பி சரண் அடிக்கடி அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறார். 

அந்த வகையில் தற்போது எஸ்பிபியின் உடல் நிலை குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் அப்பா நலம் பெறுவதற்கான நிலையை நோக்கி தொடர்ந்து சீராக முன்னேறிக் கொண்டிருக்கிறார். வாய்வழி திரவங்களுடன் எக்மோ/ வெண்டிலேட்டர், பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளும் தொடர்ந்து வழங்கப்படுகின்றன என தெரிவித்து இருந்தார்.

கொரோனாவில் இருந்து உடல்நிலை தேறி வந்த நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் கடந்த 24 மணி நேரமாக மீண்டும் கவலைக்கிடம் என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்து உள்ளது.

உயிர் காக்கும் மருத்துவ கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவக்குழுவினர் எஸ்.பி.பிக்கு தீவிர சிகிச்சை அளிப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.                   


தொடர்புடைய செய்திகள்

1. எஸ்பிபி மருத்துவக் கட்டண விவகாரத்தில் நடந்தது என்ன; எஸ்பிபி சரண் விளக்கம்
எஸ்பிபி மருத்துவக் கட்டண விவகாரத்தில் நடந்தது என்ன என்பது குறித்து அவரது மகன் எஸ்பிபி சரண் விளக்கம் அளித்து உள்ளார்.
2. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மருத்துவ செலவு தொடர்பான செய்தி தவறான செய்தி - மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மருத்துவ செலவு தொடர்பான செய்தி தவறான செய்தி என மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
3. மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குறித்து நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியவை...!
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குறித்து நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியவை...! தனது அரை நூற்றாண்டுகால திரை வாழ்க்கையில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நிகழ்த்திய சாதனைகள் குறித்து நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியவை...!
4. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு : கமல் - ரஜினி - பிரபலங்கள் இரங்கல்
எஸ்.பி.பி மறைவு - கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான், ஆர்யா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
5. "எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்" - எஸ்.பி.பி. சரண் தகவல்
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைந்து குணமடைந்து வருவதாக என அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.