சினிமா செய்திகள்

‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ படத்தில் பாட்டியாக பாடகி உஷா உதூப்; பேத்தியாக அக்‌ஷராஹாசன் + "||" + Singer Usha Uthup as the grandmother in the film 'Achcham Madam Naanam Payirppu'; Aksharahasan as granddaughter

‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ படத்தில் பாட்டியாக பாடகி உஷா உதூப்; பேத்தியாக அக்‌ஷராஹாசன்

‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ படத்தில் பாட்டியாக பாடகி உஷா உதூப்; பேத்தியாக அக்‌ஷராஹாசன்
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு படத்தில் பாட்டியாக பாடகி உஷா உதூப்; பேத்தியாக அக்‌ஷராஹாசன் நடிக்கிறார்கள்.

அக்‌ஷராஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்துக்கு, ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில் பாட்டி வேடத்தில் பிரபல பாடகி உஷா உதூப்பும், பேத்தி வேடத்தில் அக்‌ஷராஹாசனும் நடிக்கிறார்கள்.

படத்தை பற்றி டைரக்டர் ராஜா ராமமூர்த்தி சொல்கிறார்:

“சமூகத்தை பொருத்தவரை, ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ என்ற 4 பண்புகளும் ஒரு நல்ல பெண்ணின் தகுதியாக கருதப்படுகிறது. அப்படி நான்கு பண்புகளும் அமையப்பெற்ற ஒரு நல்ல பெண்ணை பற்றிய கதை இது.

ஜெயப்பிரகாஷ், சுரேஷ்மேனன், ஜார்ஜ் மரியன், மால்குடி சுபா, அஞ்சனா, ஜானகி சபேஷ், கலைராணி ஆகியோரும் இந்த படத்தில் பங்கேற்கிறார்கள்.”