சினிமா செய்திகள்

டாப்சியுடன் இணைந்து விஜய் சேதுபதி, 2 வேடங்களில் நடிக்கிறார் + "||" + In conjunction with Topsy Vijay Sethupathi plays 2 roles

டாப்சியுடன் இணைந்து விஜய் சேதுபதி, 2 வேடங்களில் நடிக்கிறார்

டாப்சியுடன் இணைந்து விஜய் சேதுபதி, 2 வேடங்களில் நடிக்கிறார்
டாப்சியுடன் இணைந்து 2 வேடங்களில் விஜய் சேதுபதி, நடிக்கிறார்

விஜய் சேதுபதி ஒரு புதிய படத்தில், 2 வேடங்களில் நடிக்கிறார். பெயர் சூட்டப்படாத அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக டாப்சி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். பிரபல டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் டைரக்டராக அறிமுகம் ஆகிறார். அவர் கூறுகிறார்:

“இது, நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள ஜனரஞ்சகமான படமாக இருக்கும். விஜய் சேதுபதி வயதானவராகவும், இளைஞராகவும் 2 வேடங்களில் நடிக்கிறார். முதல்கட்ட படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் நடந்தது. அங்குள்ள ராம்பாக், சமோத் என்று அழைக்கப்படும் பிரமாண்டமான மாளிகைகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.

எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா நடித்த ‘அடிமைப்பெண்’ படத்தின் படப்பிடிப்பு அங்குதான் நடைபெற்றது. அதன் பிறகு அங்கு படமாக்கப்பட்ட தமிழ் படப்பிடிப்பு மிக குறைவு. பிரமாண்டமான மாளிகைகள் படத்தின் பிரதான கதாபாத்திரங்களாக இருக்கும். மிக தீவிரமான முயற்சிகளுக்குப்பின், அங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைத்தது.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நடித்த இடத்தில் விஜய் சேதுபதி, டாப்சி ஆகிய இருவரும் நடித்த காட்சிகள் படமானது. இருவரும் அதை தங்கள் பாக்கியமாக கருதினார்கள். படக்குழுவினர் ராசியான இடமாக கருதினார்கள். அந்த மாளிகைகளில் நடைபெறும் கோர்வையான சம்பவங்கள் படத்துக்கு பெரும் பலமாக இருக்கும்.”

தொடர்புடைய செய்திகள்

1. டாப்சியுடன் இணைந்து விஜய் சேதுபதி, 2 வேடங்களில் நடிக்கிறார்
விஜய் சேதுபதி ஒரு புதிய படத்தில், 2 வேடங்களில் நடிக்கிறார்.
2. மவுன படத்தில் விஜய் சேதுபதி
விஜய்சேதுபதி இமேஜ் பார்க்காமல் முதியவர், வில்லன், திருநங்கை போன்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
3. வெப் தொடரில் விஜய் சேதுபதி
வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் தமிழ், இந்தி, தெலுங்கில் அதிக தொடர்கள் தயாராகின்றன.