சினிமா செய்திகள்

போதைப் பொருள் விவகாரம்: போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஆஜர் + "||" + Drug case: Bollywood actress Rahul Preet Singh at the Narcotics Prevention Office in Mumbai

போதைப் பொருள் விவகாரம்: போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஆஜர்

போதைப் பொருள் விவகாரம்: போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஆஜர்
போதைப்பொருள் வழக்கு விசாரணைக்காக மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் பாலிவுட் நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஆஜரானார்.
மும்பை,

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து, இந்தி திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ளது. போதைப்பொருள் பயன்படுத்தியது மற்றும் தனது காதலன் சுஷாந்த் சிங்கிற்காக போதைப்பொருள் வாங்கியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நடிகை ரியா சக்ரவர்த்தி கடந்த 8-ந் தேதி கைது செய்யப்பட்டார். அவரது தம்பி சோவிக், சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.


மேலும் திரையுலகை சேர்ந்த சிலரிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது பிரபல தமிழ் மற்றும் இந்தி நடிகைகளான ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோனே, இந்தி நடிகைகள் சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோருக்கும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதில் சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோரின் பெயரை நடிகை ரியா பகிரங்கப்படுத்தி உள்ளார்.

இந்தநிலையில் நடிகைகள் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோருக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று முன்தினம் சம்மன் அனுப்பினர். அதில் ரகுல் பிரீத்சிங் நேற்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் அதன்படி அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. வெளியூரில் இருப்பதால் அவர் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு ஆஜராவார் என்று கூறப்பட்ட நிலையில், இன்று மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் பாலிவுட் நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஆஜராகியுள்ளார்.